பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

16

அருள்நெறி முழக்கம்


எக்காரணத்தைக் கொண்டும் எதிர்பார்த்திருத்தல் கூடாது. பிறர் ஒருவனின் உதவியை நாடினால் அந்தக்காரியம் செம்மையாக நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஒருசிலர், தங்களுடைய எண்ணங்கள் கைகூட வேண்டும் என்பதற்காக ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் கருதிச் சென்ற காரியம் நிறைவேறாவிட்டால் ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்திவிடுகின்றார்கள். இது தவறுடைய செயலாகும். இம்மாதிரியான எண்ணம் மக்களிடம் பரவக்கூடாது என்பதற்காகத்தான் சைவ சமயக்குரவர்கள் சிவபூசையினால் ஏதாவது நன்மை வருமேயானால் உண்டாகுமேயானால் - அதைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளாமல், "ஆண்டவனே! நீயே அதனை ஏற்றுக் கொள்வாயாக" என்று கூறியிருக்கிறார்கள். இவைகளை எல்லாம் நாம் மறந்து நம்முடைய தேவைகளையெல்லாம் நிறைவு செய்ய வேண்டும் என்று ஆண்டவனை வழிபடுகின்ற மக்கட் கூட்டத்தில் குறிப்பிட்டவர்கள்தான் மனம் நெக்கு நெக்குருகிப் பாடி வழிபடுகின்றனர். உள்ளம் தோய்ந்த பிரார்த்தனையுடன் வழிபடுபவர்கள் ஒருசிலர்தான். மக்கட்சமுதாயம் ஆண்டவனை வாழ்விக்கும் முழுமுதற் பொருள் என்று கருதாமல் தேவையைப் பூர்த்தி செய்பவன் என்று கருதுவது கூடாது. இன்றைய மக்கட் சமுதாயத்தின் போக்கை வழிபாட்டை நன்கு ஓர் மேல்நாட்டு அறிஞன் எடுத்துக் கூறுகின்றான். “இன்றைய வழிபாடு எல்லாம் - பிரார்த்தனை அனைத்தும் தேவையின் நலமான முடிவைக் கருதித்தான். உண்மைான உள்ளம் தோய்ந்த பிரார்த்தனையை இன்று நாம் காண முடியவில்லை. உள்ளம் தோய்ந்த பிரார்த்தனை இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டதோ என்று ஐயப்பட வேண்டி இருக்கின்றது” என்று அழகுபட எடுத்துக் கூறுகின்றான்.

நாம் ஆண்டவன் முன்னர் நமது தேவையைப் பூர்த்தி செய்க என்று வழிபடுவது நமது வழிபாட்டிற்கே இழிவைத் தருகின்றது. அவ்வாறு வழிபடுவது சுயநலமாகிவிடும். நாம் நமது சுயநலம்