பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

32

அருள்நெறி முழக்கம்


நெறியென்னும் மருந்தைப் பல்வேறு பெயர்களால் பயன்படுத்தினார்கள் சமயப் பெரியார்கள்.

அறம் மக்களிடம் குடிகொள்ள வேண்டும் என்ற காரணத்தால் தென்முகக் கடவுளைக் காட்டினார்கள். மக்கட் சமுதாயத்திற்கு வீரத்தை முருகக்கடவுள் மூலம் உணர்த்தினார்கள். தடையற்ற நல்வாழ்வு வேண்டுமானால் விநாயக மூர்த்தியை வழிபடு என்று கூறினார்கள். இன்பமும் துன்பமும் இன்றி நடுநிலை வேண்டுமானால் சிவபெருமானை வழிபடு என்றார்கள். எல்லோரிடத்தும் அன்பாக இருக்கவேண்டும் என்பதற்காக அன்பின் உருவமான அம்மையைக் காட்டினார்கள். மக்கள் உள்ளத்தில் நல்லனவற்றைக் கற்பிக்கப் பல்வேறுபட்ட உருவங்களை உண்டாக்கினார்கள். மனிதனின் அறிவுதான் தனது உபயோகத்திற்கு ஏற்றவாறு கடவுளுக்குப் பெயர் கொடுத்தது. இதனைத்தான், மாணிக்கவாசகர் “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்க்கு” என்று பாடியருளினார். சமயம் அப்பழுக்கில்லாதது. தீமையும் பொய்மையும் இல்லாத ஒன்று எது . என்றால் அது "சமயம்" தவிர வேறு இல்லை. அது சமயப் பெரியோர்களால் அன்பின் உருவமான அடியவர்களால் - பணிமேற்கொண்ட தொண்டர் குழாத்தால் உருவாக்கப்பட்டது. அது பலருக்குச் சொந்தமானது. ஒரு சாராருக்கென்று கருதுவது சரியன்று.

சமயக் கொள்கைகள் பெட்டியினுள் அடைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கோ அவர்கள் வாழ்கின்ற அவர்கள் வாழ்கின்ற நாட்டிற்கோ பயன்தர முடியாது, அவற்றால் நாடும் மக்களும் பயன்பெற வேண்டுமேயானால் சமயக் கொள்கைகளை ஒரு இலட்சியத்தின் அடிப்படையில் நின்று உலக மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் கொள்கையும் லட்சியமும் மிக மிக முக்கியம் என்பதை எல்லோரும் உணர வேண்டும். நம்முடைய கொள்கைகள் எல்லாம் அன்பின்