பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

34

அருள்நெறி முழக்கம்


எந்தக் காரியத்தையும் நீங்களாகச் செய்து முடித்து வெற்றியைத் கண்டு அதன் பயனை உலகம் பெற்றுவாழ ஒற்றுமை அவசியம் என்பதை எல்லோர்க்கும் உணர்த்தி ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட வேண்டும். ஒற்றுமை இல்லாத நாடு எக்காலத்தும் முன்னேற்றம் காண முடியாது. கூட்டுறவு வாழ்வு வெற்றியைத் தரப் பிரார்த்தனையின் உதவியை நாடுங்கள். அது நிச்சயமாக வெற்றியைத் தரும். அதற்கு ஆண்டவன் நிச்சயமாகத் துணை செய்வான் என்று நம்புங்கள். அந்த நம்பிக்கைதான் நம்மையும்- நானிலத்தையும் வாழ்விக்கும்.

அண்ணல் காந்தி அடிகள் காட்டிய-கையாண்ட நூற்புப் பயிற்சி ஒவ்வொரு மனிதனின் சுயதேவையையும் பூர்த்தி செய்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை அகற்றி உடலுக்கும் உயிருக்கும் வழிகாட்டுகிறது. உடலுக்கு உணவு வேண்டியது போலத்தான் உயிருக்கும் பிரார்த்தனை வேண்டும் என்பதை அண்ணல் காந்தி அடிகள் நமக்கு நன்கு போதிக்கின்றார். அண்ணலின் வாழ்வினைப் பின்பற்றி வாழ்ந்து அவர்கள் கையாண்ட பிரார்த்தனையை வளம்பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். நூற்பில் கவனம் இருப்பதால் சிந்தனை ஒருநிலைப்பட்டதாக இருக்கிறது. சமயப் பெரியார் - சமூகப் பெரியார்களின் பெயரால் ஆங்காங்கு இயங்குகின்ற கழகங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நாட்டின் நலம் கருதி நாட்டு மக்களின் நலம் கருதி- சமய வளர்ச்சி குறித்துத் தொண்டாற்ற வேண்டும்.

ஒர் இலட்சியத்தை நாடிச் சென்று பணியாற்றும் நாம் எல்லோரும் தனித்துத் தனித்து நின்று செயலாற்றுகின்ற காரணத்தால் நமது செயல்கள் எல்லாம் பிரிவுபட்டுப் போகின்றன. ஆதலால்தான் குறிப்பிட்டவெற்றியைக் காண முடியவில்லை.நல்ல வெற்றியைக் காண வேண்டுமானால் நம்முள் ஒற்றுமை வேண்டும். சமயத் தொண்டு வீடுகளில் இருந்து கிளம்பி எங்கும் பரவிப் பணியாற்ற வேண்டும். சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற பண்பை நாமும் மறக்கத் தலைப்பட்டோம். சமுதாயமும் மறந்தது. இந்த உயரிய