பக்கம்:அறவோர் மு. வ.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

7

அறவோர் மு. வ.

டாக்டர் மு. வ. அவர்கள் சிறந்த கருத்துகளைச் சந்தையில் வடிக்கும் சிந்தனைச் சிற்பி. இளைய தலை முறையினரை நெறிப்படுத்தும் நெறிகாட்டி. வாழ்க்கைக் கடலில் அலைப்புண்டு அலமருவோருக்கு வாழ்க்கை விளக்கமாகத் திகழுபவர். சிக்கல்களை மேற்போக்காகக் கண்டு மருந்திட்டுச் செல்லாமல் அடிப்படைத் தேவைகள் உணர்ந்து சிக்கல்களை அவிழ்க்கும் செல்வர் அவர். எனவே தான் அவர் அறிஞர் பெர்னாட்ஷாவை மதித்துப் போற்று என்றார்.

அறிஞர் பெர்னாட்ஷாவை நான் மதிப்பதற்குக் காரணம், வாழ்க்கைச் சிக்கல் எதுவாயினும் அதை மேற்போக்காகக் கண்டு மருந்திட்டுச் செல்லாமல், அடிப்படைக் காரணம் கண்டு திருத்தும் ஆற்றல் அவருடைய எழுத்துக்களில் இருத்தலே ஆகும்.

- அறிஞர் பெர்னாட்ஷா - முன்னுரை, 1948

என்ற பகுதியினால் இது தெளிவாகிறது. திரு. வி. க. அவர்களும் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற நூலிற்கு எழுதியுள்ள அணிந்துரையில், மு. வ. அவர்களின் பள்ளத்தினின்று எழும் கருத்துகள் சிந்தனைக்குரியன என்று பாராட்டுகின்றார்.

ஆரியர் மு. வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக் கொணர்ந்தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சினின்றும் அரும்பும் கருத்துச் சிந்தனைக்குரியதே.

- திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் -
அணிந்துரை, பக். 14

இப்படி, தாம் மிகவும் மதித்துப் போற்றும் பெரியாரின் பாராட்டையே பெற்ற டாக்டர் மு.வ. அவர்கள் தனக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/10&oldid=1202831" இலிருந்து மீள்விக்கப்பட்டது