பக்கம்:அறவோர் மு. வ.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அறவோர் மு. வ.


கடமையுணர்வுடன் தாம் ஏற்ற பணிகளை இனிதே யாற்றி வர வேண்டும் என்பதனை அப்படம் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது"

என்ற காரணமும் அவரைச் சிறந்த அறவோராகவே காட்டி நிற்கின்றன.

தனிநெறி

அறத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் டாக்டர். மு. வ.
"அறம் என்பது எல்லோருடைய மனத்திலும் உள்ள

பொதுச் சட்டம். இயற்கைச் சட்டம்."

“அறம் என்பது ஆற்றல் மிக்கது. அதை எதிர்த்து வாழ முடியாது."
"அறத்தை வெல்லவும் முடியாது".
"மனிதனின் மனத்தில் உணர்வு உள்ள வரையில் அறத்தை அழிக்கவும் முடியாது."

என்ற பகுதிகள் அறத்தில் அவர் கொண்ட நம்பிக்கையைப் புலப்படுத்துகின்றன. இப்படி அறத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டதனால் தான் அதை உணர்த்துவதற்குத் தமக்கெனத் தனிநெறியினை வகுத்துக் கொண்டார்.

"அறவுரை கூறுவதால் ஒரு சிலரைத்தான்- இயல்பாகவே பண்பட்டு வரும் ஒரு சிலரைத்தான் திருத்த முடியும். மற்றவர்களைத் திருத்த அறவுரை பயன்படுவதில்லை. பயன்படுவதானால் புத்தரும், ஏசுவும், வள்ளுவரும், காந்தியும் பிறந்த பிறகு அறிஞர்களின் மூளைகள் அணுக்குண்டையும் நீரகக் குண்டையும் கண்டுபிடிப்பதில் முனைந்திருக்குமா? அறிவுரையால் பெரும்பாலோரின் மனத்தைத் திருத்தலாம் என்பது வீண்கனவு. அழும் குழந்தையை முத்தமிட்டு அமைதிப்-
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/13&oldid=1237228" இலிருந்து மீள்விக்கப்பட்டது