பக்கம்:அறவோர் மு. வ.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அறவோர் மு. வ.


இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவைகளைக் குறைத்து வாழலாம் அல்லவா?"
-மண்குடிசை, பக். 52

கவலையற்ற வாழ்க்கையும் சிக்கன வாழ்க்கையும் வாழ மனத்தில் ஆடம்பரம் இல்லாமல் வாழ வேண்டும் என்கின்றார்.

"மனத்திலேயே ஆடம்பரம் இல்லாமல் இருந்தால்தான் சிக்கன வாழ்க்கையையும் கவலையற்ற வாழ்க்கையையும் வாழ முடியும். தாய்வீட்டுப் பட்டாக இருந்தாலும் அதை விரும்புகிற மனமே நல்ல மனம் அல்லவாம். இன்றைக்கு அந்த ஆசைக்கு இடம் கொடுத்தால் நாளைக்கு வேறுபல ஆடம்பர ஆசைகள் மனத்தில் வரு(மா)ம்."
-அகல் விளக்கு, பக். 290

ஆடம்பர விரும்பிகளிடம் பழகாமல் இருத்தல் நலம் என்பது இவர் எண்ணம்.

"ஆடம்பரக்காரரோடு பழகினால் ஒருவேளையாவது மனத்தில் ஏக்கம் வரும். பழகாமலே இருந்தால் தலைநிமிர்ந்து வாழலாம்."
- அகல் விளக்கு, பக். 290

ஆடம்பரம் அமைதியான வாழ்க்கையைப் பாழ்படுத்த வல்லது ஆதலின் பாவங்களில் பெரிய பாவம் ஆடம்பரம் என்கின்றார்.

"மனமாரச் சொல்கிறேன். இன்றைய நிலையில் பாவங்களில் பெரிய பாவம் குற்றங்களில் முதல் குற்றம் எது என்று என்னைக் கேட்டால் விபசாரம், கொள்ளை, கொலை என்று எவ்வெவற்றையோ சொல்லமாட்டேன். ஆடம்பர வாழ்க்கை என்ற ஒன்றைத்தான் சொல்வேன். ஏன் தெரியுமா?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/19&oldid=1236300" இலிருந்து மீள்விக்கப்பட்டது