பக்கம்:அறவோர் மு. வ.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

21

“இன்றைய சமுதாயம் ஒரு நாகரிகக் காடு. இங்கே புலிகளும் ஓநாய்களும் ஏமாற்றி வாழ்கின்றன. மான்களும் முயல்களும் ஏமாந்து வாடுகின்றன. இந்தப் பொல்லாத காட்டுக்குத் தேவையானவை கத்தியும் துப்பாக்கியுமே - செல்வமும் செல்வாக்குமே. அறமும் உண்மையுமல்ல. நல்ல வழியில் உறுதியாக நிற்க வேண்டும் என நினைப்போர் இந்தப் பொல்லாத சமுதாயத்தில் மகிழ்ச்சியாகவே வாழவே முடியாது. ஏமாந்து ஏமாந்து வாடிவாடிச் சாகவே முடியும்"
- வாடா மலர், பக். 158

என்ற தானப்பனின் கூற்றில் சமுதாய அமைப்பை விளக்குகின்றார். மண்குடிசை நாவலில் சமுதாயத்தை மண்குடிசை என்று குறிப்பிடுகின்றார்.

"இன்று உள்ள சமுதாயம் மண்குடிசை போன்றது. அதில் எலிகள் வளைதோண்ட முடிகிறது. பெருச்சாளிகள் கடைக்காலையே தோண்டுகின்றன. பல்வகைப் பூச்சிகளும் குடிபுகுகின்றன. எல்லாம் சேர்ந்து குடிசையைப் பாழாக்க முடிகிறது. மண்குடிசையாக உள்ள வரையில் இவைகளைத் தடுக்க முடியாது. ஒன்று, குடிசையை விட்டு இயற்கையோடு இயற்கையாய்க் குகையில் தங்கி வெட்ட வெளியில் திரியவேண்டும். அல்லது ஒழுங்கான கல்வீடு கட்டி வாழ வேண்டும். அப்போது எலிகள் முதலியன தோன்றி வளர முடியாது."
- மண்குடிசை, பக். 503

சமுதாய அமைப்பை ஆய்ந்தவர் அதில் உள்ள குற்றங்களுக்கு அதன் அமைப்பே காரணம் என்று கூறுகின்றார்.

"வாழ்க்கையில் நல்ல அமைப்பு இல்லையானால் கெட்ட சூழலுக்கு அடிமையாவது யார் குற்றம்? அரசியல் அமைப்பின் குற்றமே ஒழிய ஒரு சிலரின் குற்றம் அல்ல.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/24&oldid=1236325" இலிருந்து மீள்விக்கப்பட்டது