பக்கம்:அறவோர் மு. வ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அறவோர் மு. வ.


உலகத்தின் குற்றமே தவிர துன்பத்திற்கு உள்ளானவரின் குற்றம் அல்ல."
- செந்தாமரை, பக். 81-82

என்ற பகுதியில் இதனைச் சுட்டுகின்றார். சமுதாயம் திருந்தாமல் இருப்பதற்குக் காரணங்களை ஆய்கின்றவர், வறுமை, சொல்வேறு செயல்வேறு என்ற இரட்டை வாழ்க்கை, உழைப்புக்கும் உண்மைக்கும் மதிப்புத் தராமல் வேறு எது எதற்கோ மதிப்புத் தருதல், போட்டிக்கும் ஏக்கத்துக்கும் இடம் தரல் முதலியவைகளே காரணங்கள் என்று கூறுகின்றார். இவை எல்லாம் இல்லாத ஒரு சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்பதே அவர் உள்ள விழைவு.

"உலகம் ஒரு பக்கம் போலியான இரக்கம் காட்டுகிறது. மற்றொரு பக்கம் எதிர்பாராமல் கெட்டவர்களை மேன்மேலும் கெடுத்துக் கொண்டே இருக்கிறது. வறுமைதான் காரணமாக இருக்க வேண்டும்."
- மலர்விழி, பக். 55
"நம்புவது வேறு நடப்பது வேறு. பெரியபெரிய உத்தமர்கள் பிறந்தும் திருந்த முடியாமல் நாடு இருப்பதற்குக் காரணம் மக்களிடையே இந்த இரட்டை வாழ்க்கை வளர்ந்ததுதான்."
- மண்குடிசை, பக். 61
"உழைப்புக்கும் உண்மைக்கும் தவிர வேறு எதற்கும் மதிப்பு இல்லாமல் போனால் உலகில் குற்றங்கள் குறையும்."
- மண்குடிசை, பக். 436
"போட்டிக்கும் ஏக்கத்துக்கும் இடம் இல்லாதபடி சமுதாயம் அமைப்பதுதான் கெட்டவர்களைத் திருத்த வழி."
-மண்குடிசை, பக். 440
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/25&oldid=1236324" இலிருந்து மீள்விக்கப்பட்டது