பக்கம்:அறவோர் மு. வ.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அறவோர் மு. வ.

சாதி ஒழிப்பு

சமுதாய முன்னேற்றத்திற்குச் சாதி ஒரு தடை என்பது மு. வ. அவர்களின் கருத்து. சாதி வேற்றுமைகள் பொய்யானவை. அவற்றை ஒழிக்க வேண்டும் என்பது அவர் கண்ட உண்மை.

"சாதி முதலான வேறுபாடுகள் உண்மையானவை அல்ல; பொய்யானவை; அவற்றை ஒழிப்பது கடமை தான்."

எனவேதான் சாதி சமய வேறுபாடுகளை மறக்கவும் புறக்கணிக்கவும் கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றார்.

"சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக் கொள்ள முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்"
- தம்பிக்கு, பக். 15

இன்று நாட்டு ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது சாதிக் கொள்கையே ஆதலின் தாமாக வராத மாற்றத்தைச் சட்டத்தால் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

"சாதி ஒரு பொய்; சாதி வேறுபாடு பொய்யின் அடிப்படையில் நிற்பது. அதனால்தான் அறிவு வளர வளர நாகரிகம் வளர வளரச் சாதி இருக்குமிடம் தெரியாமல் மறைகிறது. அப்படிப்பட்ட பொய்யான வேறுபாட்டைச் சட்டத்தால் அரைநாளில் மாற்றி விடலாம்.”
- தம்பிக்கு, பக். 21

சமுதாயத்தில் அவர் காணும் சாதி இரண்டு. அவையும் பண்பின் அடிப்படையில் வாழ்க்கையின் அடிப்படையில் கண்டன.

"உன் சாதிப் பெண்ணாகப் பார்த்து மணந்துகொள். முதலில் நீ என்ன சாதி என்று எண்ணிப்பார். இப்படித் தான் வாழ வேண்டும் என்ற சாதியா? எப்படியாவது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/29&oldid=1236327" இலிருந்து மீள்விக்கப்பட்டது