பக்கம்:அறவோர் மு. வ.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அறவோர் மு.வ.


வளர்ந்து பூத்தால் எப்படி மகிழ்ச்சி அடைவேனோ அப்படி எந்தக் குடும்பத்திலாவது அன்பாக வாழ்க்கை நடத்துவதைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவேன்."
- நெஞ்சில் ஒரு முள், பக். 389

என நெஞ்சில் ஒரு முள்ளில் அறவாழி என்ற மாந்தர் வழிப் புலப்படுத்துகின்றார். இப்படித் தாம் மிகவும் விரும்பிப் போற்றும் குடும்ப வாழ்க்கையில் குறைகள் மலிந்திருப்பதைக் கண்டு நெஞ்சம் நோகின்றார். எனவே தான் குடும்ப வாழ்க்கையைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பல நாவல்களில் குடும்ப வாழ்க்கையைக் கதைப் பொருளாக்குகின்றார்.

வாழ்க்கை என்பது என்ன என்பதை நெஞ்சில் ஒரு முள் என்ற நாவலில் மிக அழகாக விளக்குகின்றார்.

"மோட்சம், நரகம், சுவர்க்கம் இவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ வேண்டிய, முறைப்படி வாழ்ந்து அமைதியான இன்பம் பெற்று நரைதிரை மூப்பு வந்து உடலை விட்டு மறைவதே வாழ்க்கை."
- நெஞ்சில் ஒரு முள், பக். 332 - 33
இப்படிப்பட்ட வாழ்க்கை உயர்வதற்கும் தாழ்வதற்கும் காரணம் மனமே. "தன்னைக் கடந்து பெரிய வட்டம் போல் மனம் விரிவு அடையும் அளவிற்கு வாழ்க்கை உயரும்... தன்னையே சுற்றிக் குறுகும் அளவிற்கு வாழ்க்கை தாழும்..."
- நெஞ்சில் ஒரு முள், பக். 333

இந்த வாழ்க்கை ஒரு கோயில். அங்கே அன்பு ஆர்வம் இவையே இலங்குதல் வேண்டும். நியாயம், நேர்மை இவை மதிப்பற்றவையாக இருக்க வேண்டும்.

"உள்ளன்பு இடம்பெற்ற இல்வாழ்க்கையில் நியாயம் நேர்மை இவற்றை மதிக்கலாமா? அது என்ன? நீதி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/33&oldid=1236335" இலிருந்து மீள்விக்கப்பட்டது