பக்கம்:அறவோர் மு. வ.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அறவோர் மு. வ.

என்று கூறுகின்றார். அப்படி எனில் சில குடும்பங்கள் பிரிந்து வாழ்வதற்குக் காரணம் என்ன என்று வினாக்கணை தொடுப்போருக்கு,

"குடும்பத்தைப் பிரிப்பது இடம் அல்ல மனமே."
- மண் குடிசை, பக். 127
"அறுபது ஆண்டு ஒற்றுமையாக வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சிறு மனம் பொல்லாத மனம் பிரித்துப் பாழாக்கி விடும்"
- கள்ளோ காவியமோ, பக். 93

என மனமே காரணம் என்று பதில் குரல் கொடுக்கின்றார் எனவேதான் வாழ்க்கைக்குத் தேவையானது மனப் பொருத்தமே என்கின்றார். தொல்காப்பியனார் காதல் வாழ்க்கையில் ஈடுபடுவோருக்குப் பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு முதலிய பத்துப் பொருத்தங்கள் தேவை என்று கூறியுள்ளார். ஆனால் டாக்டர் மு. வ. அவர்களோ - வாழ்க்கையை நன்கு தெளிந்த டாக்டர் மு. வ. அவர்களோ இந்தப் பொருத்தங்களைவிட மனப்பொருத்தமே. முதன்மையானது என்று கருதுகின்றார்.

"ஆஸ்திரேலியாவைப் பற்றியும் அமெரிக்காவைப் பற்றியும் இமயமலையைப் பற்றியும், மிசிசிபியைப் பற்றியும், எக்ஸ்ரேயைப் பற்றியும் அணுக்குண்டைப் பற்றியும் அறியும் அறிவால் இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்த முடியாது என்றும், மனத்தைப் பற்றி அறிந்து ஒழுகினால்தான் சீராக நடத்த முடியும் என்றும் விளக்கினேன். மற்றப் பொருத்தங்களைவிட மனப் பொருத்தமே முதன்மையானது என்றேன்."
- தங்கைக்கு, பக். 62

இத்தகைய ஆற்றல் வாய்ந்த மனம் பண்படுவதற்கு "ஆடம்பரம் ஆணவம், ஆரவாரம் இவைகள்தான் தனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/39&oldid=1234831" இலிருந்து மீள்விக்கப்பட்டது