பக்கம்:அறவோர் மு. வ.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

37

வாழ்க்கையில் மனம் பண்படுவதற்குத் தடைகள்" என்று கருதுகின்றார்.

வாழ்க்கை இன்பமாக இல்லாவிட்டாலும் அதை வெறுத்து ஒதுக்கக் கூடாது. வெறுப்பு வம்பு எல்லாம் சேர்ந்து சேர்ந்து பலதுளிப் பெருவெள்ளமாய் வாழ்க்கைக்கே இடையூறாக ஆகி விடுவதை மெய்யப்பன் வாழ்க்கைவழி மண்குடிசையில் சித்திரிக்கின்றார்.

மேடும் பள்ளமும் நிறைந்த இந்த வாழ்க்கை எப்படியாவது வாழலாம் என்று இருக்கக் கூடாது. திட்டமிட்ட வாழ்க்கை நடாத்த வேண்டும் என்பதை அகல் விளக்கில் அறிவிக்கின்றார்.

"கோடு போட்டு வாழ்க்கை நடத்துவது நல்லதுதானே அம்மா! போட்ட கோட்டில் நடப்பது எளிது அல்லவா? ஒரே கோட்டில் நடக்க வேண்டுமானால், வழி இல்லாமல் நடந்து போவதுதான் துன்பம். ஒற்றையடிப் பாதை ஒன்று இருந்தால் அதில் நடந்து போவதில் கவலையே இல்லை. ஒரு பாதையும் இல்லாத இடத்தில் இப்படி நடப்பதா? அப்படி நடப்பதா? வலக்கைப் பக்கம் திரும்பலாமா? இடக்கைப் பக்கம் திரும்பலாமா? இந்தத் திசையா? அந்தத் திசையா? என்று நூறு முறை தயங்கித் தயங்கிப் போக வேண்டும். அப்போதும் மனக்குறை தீராது. அல்லலாக முடியும். ஒற்றையடிப் பாதை இருந்துவிட்டால் போதுமே! கவலையில்லாமல் போகலாமே!"
- அகல் விளக்கு, பக். 187

கணவனுக்கு!

இல்லாளர்கள் தத்தம் இல்லாளிடம் அளவிற்கு மீறி எதிர்பார்க்கக் கூடாது. போதும் என்ற மனத்துடன் வாழ்பவர்களாக இருக்கலாம். அதிகமாக எதிர்பார்த்தால் அதிகமாக ஏமாற்றத்திற்குள்ளாக வேண்டி வரும் என்று எச்சரிக்கின்றார்.


3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/40&oldid=1234832" இலிருந்து மீள்விக்கப்பட்டது