பக்கம்:அறவோர் மு. வ.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

39


பார்த்துக் கொண்டிருப்பவள் சிறந்த மனைவி அல்ல. கணவனுடைய மனம் அறிந்து நடப்பவள் கணவனுடைய படத்தைப் பார்ப்பதோடு நிற்காமல் அவனையே பார்த்து மதித்து நடப்பவள் நல்ல மனைவி"
- மண்குடிசை, பக். 216

என்று மண்குடிசையில் மொழிகின்றார். மனைவி என்பவள் மந்திரியாகவும், வைத்தியராகவும், மனநோய் மருத்துவராகவும், செயலாளராகவும் குருவாகவும் திகழ வேண்டும். என்பதைக் குமரவேல்வழித் தெளிவுறுத்துகின்றார். ஒரு கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது அவளுடைய உண்மையான - ஆழ்ந்த அன்பையே என்பதை மெய்யப்பன் மூலம் படைத்துக் காட்டுகின்றார். மனைவி என்பவள் கணவனிடம் குற்றம் கண்டபோது அவனைத் திருத்தப்பாடுபட வேண்டும். அவனிடம் குறை இருந்தால் அந்தக் குறையை வெறுக்க வேண்டுமே ஒழிய அவனை வெறுக்கக் கூடாது. இப்படி அவனிடம் குறை கண்டு திருத்தும் முயற்சியில் ஈடுபடும் போது அந்த முயற்சி அளவானதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

"கொஞ்சம் போராட வேண்டும். போராடவும் கூடாது. அளவுக்குமேல் விட்டுக்கொடுக்கவும் கூடாது. எதிலும் அளவு வேண்டும்; அளவு தெரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை துன்பம் இல்லாமல் போய்விடும்.”
- நெஞ்சில் ஒரு முள், பக். 231-232

அப்படிப் போராடி அவனைத் திருத்த முடியவில்லை எனின் அவனை வெறுக்காமல், அவனுடைய இன்பத்தில் இன்பம் கண்டு துன்பத்தில் துன்பம் கொண்டு அவனுடைய அழிவில் அழிவதில் இன்பம் காண வேண்டும் என்பதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/42&oldid=1236336" இலிருந்து மீள்விக்கப்பட்டது