பக்கம்:அறவோர் மு. வ.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அறவோர் மு. வ.

பெற்றோர்க்கு

கணவன் - மனைவியுமாக இல்வாழ்க்கை நடத்துபவர்கள் தம் குழந்தைகளை ஒழுக்கம் கெடாமல் வளர்க்க வேண்டும் என்பதைச் சீராளர் என்ற கதைமாந்தர் வழி அறிவிக்கின்றார்.

"முயற்சி குறைவாகச் செய்தாலும் கவலை இல்லை. அளவுக்கு மேல் தவறான வழியில் முயற்சி செய்து பையனைக் கெடுத்துவிடாமல் இருந்தால் போதும். அப்படிச் செய்வதால்தானே ஒழுக்கம் மிகுந்தவர்களின் பிள்ளைகள் ஒழுக்கக் கேடர்களாய்ப் போகிறார்கள்"
- பெற்ற மனம், பக். 233

குழந்தைகளை அளவுகடந்த அன்பு காட்டி ஆடம்பரமாக வளர்க்க வேண்டியதில்லை. அப்படி வளர்த்தலே பெரிய குற்றம். அந்தக் குற்றத்தைப் புரியப் பெற்றோர்க்கு உரிமை இல்லை என்பது அவர் கருத்து.

"யார் என்ன சொன்னாலும் சொல்லிப் போகட்டும். பட்டிலும் பொன்னிலும் பழகும்படியாகக் குழந்தையை வளர்க்காதே. நம் நாட்டில் பட்டும் பொன்னும் பழக்கமாய்ப் போன ஆடம்பரங்கள் என்பது எனக்குத் தெரியும். நாம் பழகிவிட்ட ஆடம்பரத்தையும் விட்டுத் தொலைப்போம். நாட்டுப்புறங்களில் வெள்ளி மோதிரம் இல்லாமல் ஏங்கும் இளம் பெண்கள் எத்தனை பேர் எனறு எண்ணிப்பார். ஆகவே நம் குழந்தையை ஆடம்பரமாக வளர்க்க நமக்கு உரிமை இல்லை என்று உணர வேண்டும்"
-பெற்ற மனம், பக். 152

பெண்ணாகப் பிறந்தவர்கள் அனைவரையும் திருமணச் சிறைக்குள் அடைக்கத் துடிக்கும் பெற்றோர்க்கு,

"பெண்ணாகப் பிறந்தவர்கள் எல்லோரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தக்கூடாது. தக்க கணவர் கிடைக்காத
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/45&oldid=1236341" இலிருந்து மீள்விக்கப்பட்டது