பக்கம்:அறவோர் மு. வ.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அறவோர் மு. வ.

"ஒத்த வயதுள்ள ஆண்பிள்ளைகளோடு பழகுவதில் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன் வாழ்வோ தாழ்வோ அதை ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணர்ச்சி பொல்லாதது. அதைக் கடந்து பொதுவான அன்போடு அண்ணன் தங்கைபோல் பழக முடியுமானால் பழகு."
- அகல் விளக்கு, பக். 180
"ஆண் பெண் உறவு என்பது ஒரு நாளில் (உங்கள்) உணர்ச்சியால் முடிவு செய்யக் கூடியது அல்ல. அது வாழ்க்கை முழுவதையுமே மாற்றக் கூடியது. கவனித்துப் பொறுப்போடு நட. தங்கைபோல் பழக முடிந்தால் பழகு. இல்லையானால் பழகாதே"
- அகல் விளக்கு, பக். 181

என ஆண் - பெண் பழக்கம் அண்ணன் தங்கைபோல் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்கின்றார்.

திருமணம் ஆன பிறகு பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை,

"ஆண்டாளைப் போல் மனிதர் யாரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னாலும் சொல்லலாம், ஆனால் மீராவைப் போல் திருமணம் ஆன பிறகு கணவனைக் கைவிட்டுப் போகக் கூடாது"
- அகல் விளக்கு, பக். 348

என்றும் கூறுகின்றார்.

"ஆண்கள் எவ்வளவுதான் முற்போக்காக இருந்தாலும் சந்தேகப்படுவார்கள். ஆகையால் அவர்களின் எதிரில் அண்ணன் தம்பியுடனும் எந்த ஆடவனுடனும் நெருங்கிப் பழகக் கூடாது. பழைய பழக்கங்களையும் சொல்லக்கூடாது"
- அகல் விளக்கு, பக். 210

என்று தங்கைகளுக்கும், தமக்கைகளுக்கும் அறிவுரை கூறுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/49&oldid=1209879" இலிருந்து மீள்விக்கப்பட்டது