பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அடித்துச் செல்லப்பட்டு விடுவோம். எனவே, அரசியலைப் புறக்கணிக்காதீர்கள். புறக்கணித்தால், அரசியல் உங்களைப் புறக்கணித்து விடும்" - என்ற அண்ணாவின் எச்சரிக்கை வரலாறாகி விடுகிறது என்பது தெரியும்.

இன்று தக்கார் பலரும், பணச் செலவு கருதியும், வசைகளுக்கு அஞ்சியும், அரசியலிலிருந்து ஒதுங்கியதால், அரசியல் பகைவரிடம் தஞ்சம் புகுந்திருக்கிறது. ஆய்வு செய்க.

இனிமேலாவது அண்ணாவின் வழிகாட்டுதலின்படி தகுதியுடையார் அனைவரும் அரசியலில் ஈடுபடவேண்டும்.

‘வாழ்க!' என்பது தமிழ்ச்சொல் மட்டுமல்ல, தமிழ் பண்பு கனிந்த மனத்துடன் மற்றவரின் வாழ்க்கை செழித்து, அவர் இன்புற்று இருப்பது. அவருக்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் நல்லணி என்பதால் வாழ்த்துவது தமிழ் மரபு. அந்தச் சொல்லிலே அசை ஒலியும். இதயக் குழைவும் இருப்பதனை இதயமுள்ளோர் எவரும் உணர்வர். இது அறிஞர் அண்ணாவின் உரை.

இந்த உரையைத் தொடர்ந்து, நூலாசிரியர் மிகவும் அற்புதமாக, 'அண்ணா ஒரு தென்றல்' என்ற கட்டுரையை எழுதியுள்ளார். பல தடவை படித்துணர வேண்டிய கட்டுரை.

நூலாசிரியர் அண்ணாவை வாழ்த்துகின்றார். தமிழகம் வாழ்த்துவதற்காக வாழ்த்துகின்றார்.

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி, தமிழராய்ப் பிறந்தோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல். நூலாசிரியருக்கு ஆயிரம் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

தேதி : 12.01.94 - அடிகளார்
குன்றக்குடி