பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தொகுப்புரை




பெறற்கரிய பேராகத் தமிழுக்குக் கிடைத்துவரும் மணவையாரின் தமிழ்ப் பணியைத் தமிழ்கூறு நல்லுலகம் இன்று ஏற்றிப் போற்றத் தவறவில்லை. தமிழ் நாடு அரசு 'கலைமாமணி', 'திரு.வி.க' விருதுகளோடு, சிறந்த மொழிப் பெயர்ப்பாளர்க்குரிய சிறப்பு விருதையும் அளித்துள்ளது. இதன் மூலம் அரசு விருதுப் பட்டியலில் முதலிடத்தை மணவையார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க சிறப்புச் செய்தியாகும்.

இவரது அறிவியல் தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழ் நாடு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் வழங்கிய 'தமிழ்த் தூதுவர்' பட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி அறிவியல் மன்றம் வழங்கிய ;வளர் தமிழ்ச் செல்வர்' விருது, சென்னை சிந்தனையாளர் பேரவை சார்பில் டாக்டர் கலைஞர் தந்த 'அறிவியல் தமிழ்ச்சிற்பி' பட்டம், கேரளப் பல்கலைக்கழக விருதுக் கேடயம், பம் மல்-நாகல்கேணி தமிழ்ச்சங்கம் தந்த 'புகழ் பூத்த தமிழர்' பட்டம், ஈரோடு அல்லமா இக்பால் இலக்கியக் கழகம் தந்த 'அறிவியல் தமிழ் வித்தகர்' விருது, மணவைத் தமிழ் மன்றம் வழங்கிய 'அறிவியல் தமிழேறு' விருது, உலகப் பண்பாட்டுக்கழகம் தந்த 'முத்தமிழ் வித்தகர்' பட்டம், ஆழ்வார்கள் ஆய்வு மையம் தந்த எம்.ஜி.ஆர். விருது, திரா விடர் கழக முத்தமிழ் மன்றம் வழங்கிய 'பெரியார்' விருது, தமிழ் மாநில காங்கிரசின் ஒருமைப்பாட்டு மன்றம் தந்த 'மூப்பனார்' விருது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரங்கமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கிய குன்றக்குடி அடிகளார் விருது, காஞ்சி காமகோடி பீட, சென்டினேரியன் டிரஸ்ட் தந்த 'சேவா ரத்னா' பட்டம், அண்ணாமலைச் செட்டியாரின் அறக்கட்டளை வழங்கிய ராஜா சர். முத்தையா செட்டியார் விருது முதலாக பல விருதுகளையும் பல பரிசுகளையும் பெற்று, தன் தமிழ்ப்பணியை முத்திரைப் பணியாக்கிக் கொண்டு வருகிறார் மணவையார்.