பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகுப்பாசிரியர்

13


கதிர்' உட்பட வேறு எந்தத் தமிழ் இதழும் அறிவியல் தமிழுக்குச் செய்திருக்காத சேவையைச் செய்து வருகிறது" என தாய் வார இதழில் வெளிவந்த தலையங்கம், மணவை யாரே ஓர் இயக்கமாக இயங்கி அறிவியல் தமிழை வளர்த்து வருவதைப் பாராட்டுகிறது.

தமிழ் வளர்ச்சியில் அதிலும் அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தனி வழி கண்டு, அதை வலுவான ராஜபாட்டை யாக்கி, ஆற்றல்மிகு அறிவியல் மொழியாகத் தமிழை ஆக்கி வரும் பாங்கை, பாட்டுக்கொரு புலவன் பாரதி இன்றிருந்தால் மணவையாரின் தமிழ்ப் பணி பற்றி என்ன பாடியிருப்பான் என்பதை நினைத்துப் பார்க்கும் கவிஞர் தெசிணி,

"சென்றிடுவீர் திக்கெங்கும் திரட்டிவந்தே
செந்தமிழை செழிக்க வைப்பீர் என்று சொன்னோன்
இன்றிருந்தால் எங்கள் மணவை முஸ்தாபா
இயற்றிவரும் புது ஆக்கம் கண்டு போற்றி
வெற்றிகொண்டே புதுஇயல்கள் அனைத்தையுந்தான்
வேகமுடன் தமிழ் வளரும் நின்னால் என்றே
மன்றினிலே உயர்த்தி வைத்துப் பாடி நிற்பான்
வரகவிஞன் பாரதியும் இன்றில்லையே!"

என்று தன் ஏக்க உணர்வை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு பலதரப்பட்டவர்களாலும் ஏற்றிப் போற்றும் வகையில் ஆக்கப்பணி செய்து தமிழின் ஆற்றலை அனைத்து வகையிலும் வெளிப்படுத்தி வரும் மணவையாரின் முயற்சிகளை, அவரது அறிவியல் மற்றும் சமூக, இலக்கியப் பணிகளின் பதிவுகளான நூல்களை அடியொற்றி விரிவான கருத்தரங்கு ஒன்றை நடத்த நண்பர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டோம். அதற்காகப் பல்வேறு தலைப்புகளையும் ஆய்வாளர்களுக்குத் தந்தோம். அத்தலைப்புகளில் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை திறம்பட நிகழ்த்தி, அவ்வாய்வின்