பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அறிவியல் தமிழின் விடிவெள்ளி


நிபந்தனையுடன்தான் இவரைப் பள்ளியில் சேர அனுமதித்தார் தந்தை மீராசா. வீட்டு வேலைகள், தேநீர்க் கடைக ளுக்குப் பால் கொண்டு கொடுத்து பணம் பெற்று வருவது, விடுமுறை நாட்களில் மிட்டாய் பாக்கெட்டுகளை சைக்கிளில் எடுத்துச் சென்று ஊர், ஊராக விற்பனை செய்தல் போன்ற பல வேலைகளைச் செய்து கொண்டு இரவில் தெரு விளக்கில் படித்து தன் கல்வியைத் தொடர்ந்தார்.

நெருக்கடியிலும் படிப்பு

பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக சிறு வயதிலிருந்தே செய்தித் தாள்களைப் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். ஆனால், சொந்தமாகக் காசு கொடுத்து செய்தித்தாள் வாங்கும் வசதி இல்லாததால் அருகில் இருந்த மண்டிக் கடையில் அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கதவிடுக்கில் நுழைத்து வைக்கப்படும் செய்தித்தாள்களை தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தார். மணப்பாறை கிளை நூலகம் அவரது பள்ளிப்பருவ அறிவுப் பசிக்கு விருந்து அளித்தது வந்தது.

மணப்பாறையிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொய்கைமலை அடிவாரத்தில் நிலம் வாங்கி அவரது தந்தை பயிரிடத் தொடங்கினார். மணப்பாறையில் மாலையே இரவு உணவை முடித்துவிட்டு பொய்கைமலை களத்து வீட்டுக்கு நடந்து சென்று அங்கே இரவில் இலாந்தர் விளக்கொளியில் படிப்பார். செல்லும் போது சாலையோரமாகப் படித்துக் கொண்டே செல்வார். காலையில் குளித்துவிட்டு களத்து வீட்டிலிருந்து மணப்பாறைக்கு நடந்து வரும்பொழுது கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு வரும் வழியிலேயே அதைப் படித்து முடித்து விடுவார். அன்றாடம் ஒரு நூலாகப் படித்து