பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆர். ராமசாமி

25


வாழும் தமிழ்ப் பண்பாடு

உலகில் 30 மொழிகளில் வெளி வந்து கொண்டிருக்கும் கூரியரில் இதுவரை மறைந்து போன சுமேரிய, ரோமானிய, கிரேக்க, கார்த்தேஜியப் பண்பாடுகளைப் பற்றி மட்டுமே கூரியர் சிறப்பிதழ்கள் வெளிவந்துள்ளன. மூவாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து வரும் தமிழ்ப் பண்பாடு பற்றி உலகம் முழுவதும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக யுனெஸ்கோவுடன் பல ஆண்டுகள் போராடி 'வாழும் தமிழர் பண்பாடு The Living Culture of the Tamils என்ற தலைப்பில் சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டு வரச் செய்தார். 30 மொழிகளில் 40 இலட்சம் பிரதிகள் விற்பனையாகும் இந்த இதழின் மூலம் வாழும் தமிழரின் பண்பாட்டின் அருமையை உலகம் முழுவதும் உணரச் செய்தார்.

அறிவியல் கலைச் சொல்லாக்கம்

புதிய கலைச் சொற்களை ஒவ்வொரு அறிவியல் துறையிலும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'அறிவியல் கலைச் சொற்களஞ்சியம்' என்ற நூல் இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். 'தொழில்நுட்பக் கலைச் சொல் களஞ்சிய அகராதி' என்ற பெருந்தொகுதி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு அறிவியல் துறையிலும் கலைச் சொல் களஞ்சியங்களை உருவாக்கி வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு, முதல் முயற்சியாக 'மருத்துவக் கலைச் சொல் களஞ்சிய'த்தினை வெளியிட்டுள்ளார். அதையடுத்து 'கணினி கலைச் சொல் களஞ்சியம்' ஒன்றை உருவாக்கி வருகிறார். அதுவும் முடியும் நிலையில் உள்ளது. கணினி கலைச் சொல் களஞ்சிய அகராதி உருவாக்கத்தில் துணைத் தொகுப்-