பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீரா

35


என்பதை இன்றும் மணவை முஸ்தபா நன்றியறிதலுடன் நினைவு கூர்கிறார்.

மொழி பெயர்ப்பு ஆர்வம்

பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறும் முன்பே தன் எதிர்காலத் தமிழ்ப்பணி வெறும் இலக்கியப் பணி என்ற அளவில் அமையாது, பிற துறைகளைச் சார்ந்தே அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கு உறுதுணையாக இவர் தேர்ந்தெடுத்த முதன்மைத் துறை மொழி பெயர்ப்புத் துறையாகவே இருந்தது.

படிக்கும் போதே மலையாளம் மொழி அறிந்திருந்த இவர் அவ்வப்போது மலையாள மொழிக் கதைகளையும் கட்டுரைகளையும் தமிழில் பெயர்த்து பல்வேறு இதழ்களுக்கு அனுப்பி வந்தார். அவைகளும் இதழ்களில் அவ்வப்போது வெளிவரவே, இவருக்கு மொழி பெயர்ப்புத் துறையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அதிலும் அறிவியல் செய்திகளையும் அறிவியல் சார்புள்ள செய்திகளையும் மொழிபெயர்க்கும்போது அவற்றின் கலைச் சொற்களுக்குத் தமிழில் கலைச் சொற்களைக் கண்டறிவதில் தனி ஆர்வமும் தனி முயற்சியும் இவருக்கு இருந்து வந்ததை இவரே பலமுறை எழுதியும் பேசியும் உள்ளார்.

இவர் வீர நடை போட வேண்டிய ராஜபாட்டையைச் சுட்டிக் காட்டும் சூழல் வெகு விரைவிலேயே இவருக்கு ஏற்பட்டது. அதுவே இவரது வாழ்வின் திருப்பு முனையுமாகும்.

பாதை மாற்றிய கருத்தரங்கு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'பயிற்சி மொழி தமிழா? ஆங்கிலமா?' என்ற கருத்தரங்கு