பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


இளமை தொட்டே எழுச்சி

பின்னாளில் அவர்தம் படைப்புகள் படைக்கப்படுவதற்கு அவர்தம் பால பருவமே, அதில் கொண்ட பாலபாடமே பலப் பாடமாக அமைந்து பண்படுத்தியதைக் "காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாறு" வழி, விரியக் காணலாம். "இருக்கும் நிலை மாற்றுமொரு புரட்சி மனப்பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடன் ஆகும்" என்பதே போல் எழுச்சி மிக்க பல படைப்புகளை இஸ்லாமிய இலக்கியத் துறையில் ஆற்றி, இருப்போரையும் தட்டி எழுப்பியவர். 'துடித்தெழு தோழா துயரினி நமக்கிலை' என்று, எப்படிப்பட்ட இலக்கியப் பாரம்பரியத்தின் உடைமைக்காரர் நாம் என்பதை நமக்கே நினைவூட்டி, பலப்படுத்தியவர். அவர்தம் பல படைப்புகளும் பல திறப்பட்டன. அவற்றுள் இஸ்லாமியப் பணியார்ந்த வெளியீடுகள் எனும் போது 10 வெளியீடுகளைக் காண முடிகின்றது.

i. மூல நூல்கள் 3
1. தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்
2. அண்ணலாரும் அறிவியலும்
3. இஸ்லாமும், சமய நல்லிணக்கமும்

ii. கட்டுரை 1
4. பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்

III. களஞ்சியம் 1
5. இளையர் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்

IV. தொகுப்பு நூல்கள் 4
6. சிந்தைக்கினிய சீறா
7. தமிழில் மெய்ஞ்ஞான இலக்கியங்கள்
8. காசீம் புலவர் திருப்புகழ்
9. சமண, பெளத்த, கிறிஸ்துவ இஸ்லாமிய இலக்கியங்கள்