பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அணிந்துரை

ஞானபாரதி வலம்புரிஜான்


இல்லந்தோறும் இடம்பெற வேண்டிய
இதயமான நூல்!

முதுபெரும் அறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் செம்மாந்த தமிழ்ப்பணி பற்றிய சிந்தனைகளின் சேர்க்கை இது. இப்படிப்பட்ட வியர்வை மணக்கும் வித்தகத்திற்குப் புத்தகம் என்பதும் பொருந்துமா என்பதே கேள்வி. மொழி, இலக்கியப் போராளி ஒருவரின் பங்களிப்பை ஏறத்தாழ இப்பக்கங்கள் வெளிச்சத்தைப் பார்க்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றன.

புலவர்கள் பொதுவாக பழம்பெருமை அரியணைகளிலிருந்து படியிறங்கி வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் இடம் சுட்டிப் பொருள் விளக்குகிற ஒன்றுதான் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கைப் பணி என்று இருந்து விடுவார்கள். மணவை முஸ்தபா அவர்கள் தமிழ்ப்பணி என்பது காலத்தால் ஆற்றுகிற பணி என்பதைக் கண்டுகொண்டு தமிழ் மொழியை முன்னெடுத்துப் போனவர் என்பதை எதிரிகளும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.