பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

45

கிறது. இதனால் உயிரினங்களுக்கு வாழும் வளப்பத்தைத் தருகிறது. இதனால் தானும் வளப்பத்தின் பிறப்பிடமாகவும் ஆகிறது. இதனையும் திருவள்ளுவர்,

"மல்லல் (வளப்பமுடைய) மா ஞாலம்" என்று குறித்தார். இக்குறிப்பும் அறிவியல் பாங்கின் அடையாள மாகும்

ஏறத்தாழ ஆயிரத்தைந்துாறு ஆண்டுகளுக்குப் பின் கண்டறியப்பட்ட வான அறிவியல் உண்மையின் அடையாளம் பளிச்சிடும் குறள் இது.

"அல்லல் அருள்ஆள்வார்க் கில்லை; வளிவழங்கு
மல்லல் மா ஞாலம் கரி" (245)

என்றதாகும். இதனால் திருவள்ளுவரை அறிவியல்’ வள்ளுவர் என மனநிறைவுடன் போற்றலாம்.

தொங்கும் 'ஞாலம்'

இக்குறளில் மற்றொரு அறிவியல் அடையாளம் உள்ளது. அதனை வழங்குவது 'ஞாலம்' என்னும் சொல். சீஞாலம்’ என்பது இப்பூவுலகைக் குறிப்பது. இதற்கு உலகம் முதலிய பல சொற்கள் காரணப் பொருள்களுடன் தமிழில் உள்ளன.

இம்மண்ணுலகம் வானத்தில் ஞாயிற்றைக் சுற்றிச் சுழன்றவாறே உலவுகிறது. 'உல்-உல-உலகம்' என்னும்

சொல்வளர்ச்சி கொண்டு 'உலகம்' என்றால் ஞாயிற்றைச் அற்றி உலவி வருவதால் பெற்ற பெயர்.