பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நகரங்களில் உள்ள வசதிகள் கிராமங்களிலும் இருக்க வேண்டும் என்கிற கொள்கையோடு பாடுபட்டவர் தொண்டைமான். உத்தியோகத்தோடு அப்படிப் பொது நலப் பணி ஆற்றியவர் திரு. தொண்டைமான்.

ரசிகமணி, டிகேசியின் கலைக்களஞ்சியத்தைத் திறந்து அதிலிருந்து கவி நயங்களை, பண்பாட்டு நயங்களை முத்து முத்தாக. மணி மணியாக எடுத்துத் தொடுத்து, தமிழ் மக்களுக்கு, டிகேசியை இனம் காட்டியவர் தொண்டைமான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், ரசிகமணி டிகேசி பற்றித் தொண்டைமான் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதுபோன்ற ஒரு நூல், டிகேசி பற்றிய வரலாற்று நூல் இன்றும் வரவில்லை -

ரசிகமணி டி.கே.சி - தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைச் சேகரித்து, அவற்றை வகுத்தும் தொகுத்தும், டிகேசியின் கடிதங்கள் என்று ஒரு நூலை உருவாக்கினார் தொண்டைமான்.

அற்புதமான நூல் அது. கடிதங்களைக் கொண்டே, அருமையான இலக்கியம் ஒன்றைப் படைக்க முடியும் என்பதை தமிழில் முதல் முதலாக எடுத்துக் காட்டியவர் அவர்.

தொண்டைமான் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சரி, பேச்சோ, எழுத்தோ, ஆராய்ச்சியோ, கட்டுரையோ எதுவானாலும் அவற்றில் தனித்த முத்தரை ஒன்று இருக்கும். யாராலும் அதை அடைக்க முடியாது. வானளாவிய கோபுரங்களோடு நிமிர்ந்து நிற்கும் கருங்கற் கோயில்கள் தமிழகமெங்கும் கடவுள்