பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

13

அந்த எம்பிரானது கோலத்தை கண்டு வியக்கிறார். ஏதோ சின்னஞ்சிறிய வாமனன் வடிவில் வந்தான். நின்றான், நிமிர்ந்தான், ஓங்கி உலகளக்கும் பெருமாளாக உயர்ந்து விட்டானே என்று எண்ணுகிறார், பாடுகிறார்.

பொருமா நீள் படை
ஆழி சங்கத் தொடு
திரு மா நீள் கழல்
ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி
நிமிர்ந்த அக் கரு
மாணிக்கம் என்
கண்ணாளது ஆடுமே

என்றவர் பின்னும்

மண்ணும் நீரும்
எரியும், நல்வாய்வும்
விண்ணும் ஆய்
விலியும் எம்பிரானையே

என்றுதானே பாடுகிறார். இப்படி உலகை அளந்தவனும் அரங்கில் ஆடியவனும் கலை உலகில் ஒருப்போலவே உருப் பெற்றிருக்கிறார்கள் என்று அறிகிற போது நாமும் நம்மை அறியாமலே இருவரிடமும் காணும் ஒற்றுமையைக் கண்டு வியந்து பாராட்டுகிறோம். ஆடும் பெரு மான், எப்போது எதற்காக ஆடினான், உலகளந்தான் எவருக்காக ஞாலம் முழுவதையும், இரண்டே அடிகளில் அளந்தான் என்பதெல்லாம் நாம் அறிந்ததுதான் என்றாலும், அவற்றைக் கொஞ்சம் நினைவுப்படுத்திக் கொள்ளலாம் தானே. அன்று தில்லையில் ஒரு நடனப் போட்டி நடக்கிறது. தில்லைக் கூத்தனாம் நடராஜனும், எல்லைப் பிடாரியாம்