பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

19


தகாத முறைகளை எல்லாம் கையாளுகிறான். களவு செய்கிறான். கொலை புரிகிறான். இன்னும் என்ன என்ன எல்லாமோ செய்கிறான்.

இப்படி யெல்லாம் குணம் கெட்டு அலைகிற மனிதன் பல குண நலம் படைத்த நமது சந்ததியார் என்று சொல்லி நமது பெருமையையே குலைக்கிறான். ஆதலால் 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்ற கூற்றை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அப்படிக் கண்டிக்கிறோம், என்று கூறி ஒரு தீர்மானம் நிறைவேற்றி அமரர் உலகில் இருக்கும் அந்தப் பழைய மனிதன் டார்வினுக்கே அனுப்பி வைக்க வேணும். அவன் தானே இந்த எண்ணத்தை மனிதன் உள்ளத்தில் ஊன்றியவன் என்று காரசாரமாகவே பேசிற்றாம். அச்சிறு குரங்கின் தீர்மானத்தை ஏக மனதுடன் மற்ற குரங்குகளும் ஆமோதித்து நிறை வேற்றி வைத்தன.

இதைக் கேட்ட நான் அவமானத்தால் கூனிக் குறுகி மற்ற தீர்மானங்களைப் பற்றி எல்லாம் கேட்காமலேயே திரும்பி விட்டேன். உண்மை தானே, நல்ல பழுத்த சைவ நெறியிலே அல்லவா இந்தக் குரங்குகள் வாழ்கின்றன.

புலால் உணவையே தொடுவதில்லை. ஒன்றுக் கொன்று, அன்புகொண்டவையாக வாழத் தெரிந்திருக்கிறதே பொய், கொலை, களவு, முதலிய பாதகங்களைச் செய்கிறதில்லையே - இத்தகைய நற்பண்புகள் எல்லாம் இழந்தவனாக அல்லவா மனிதன் வாழ்கிறான். அப்படியிருக்க குரங்குக்கும், அவை போன்ற மற்ற விலங்கினங்களுக்கும் ஆறறிவு கிடையாது. ஆகவே அவைகள் உயர்திணை வகுப்பைச் சேர்ந்தவை அல்ல என்று மனிதர்கள் கருதுவது சரிதானா என்றே எண்ணினேன்.

இப்படி நான் மட்டும் எண்ணவில்லை. நமது முன் னோர்களில் அறிவில் சிறந்த பலருமே எண்ணியிருக்கிறார்கள். இந்த உலகத்தை எல்லாம் படைத்துக் காத்து