பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

23



நினைத்திருக்கிறார்கள். அதனால் தானே அருணகிரியார் வழிக்குத் துணை அவன் வடிவேலும் செங்கோடன் மயூர முமே என்று பாடினார். இத்துடன் திருப்தி அடையாமல்,

            எட்டும் குலகிரி எட்டும் விட்டு
                  ஒட எட்டாத வெளி
            மட்டும் புதைய விரிக்கும்
                  கலாப மயூரத்துனே

என்று பாடிப்பரவசம் அடைகிறார். முருகனால் மயில் தெய்வீகம் அடைகிறதா, இல்லை, மயிலால் முருகன் பெருமையுறுகிறானா என்று கூறுவது எளிதானதில்லை தான்.

இவ்விருவரின் தந்தையாம் சிவபெருமானோ அன்பு நிறைந்தவர். மூவர் முதற் பொருளாய் முத்தொழிற்க்கும் வித்தாகி நாவிற்கும் மனத்திற்கும் நாடறிய பேரறிவாய் விளங்குபவன். அந்த அன்பு விகசிக்க அறம் போன்ற அடிப்படை வேண்டுமே அந்த அறத்தின் உருவத்தில் அவன் ஏறும் விடை எருது எழுகிறது. தோடுடைய செவியனாய் - அம்மை அப்பனாய் வரும் இறைவன் விடை ஏறியே துவெண் மதி சூடி வருகிறான் என்பர் ஞான சம்பந்தன். நன்றுடை யான். அவன் தீயதில்லான் அவன் நரை வெள்ளேறு ஒன்றுடையவனாக இருப்பதின் காரணமாகத் தான் இந்த ஒன்றையே நந்தியம் பெருமான் என்று கோயில் உள்ளே முன்னமேயே கண்டு வணங்குகிறோம். திருவாவடுதுறை என்னும் தலத்திலே நந்திக்கு தனிக் கோயிலே கட்டி வணங்கியிருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலே சிவசைலம் என்னும் திருப்பதியிலே கலை உலகு கண்டு அதிசயிக்கும் நந்தியின் வடிவினை அமைத்து வழிபடுகிறோம்.

இப்படியே சிவனையும் அவனது மக்கள் இருவரையும் பறவையோடும் விலங்கினத்தோடும் சேர்த்து இணைத்து