பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

25

இன்னும் இந்தப் பரந்தாமனை குதிரை வடிவிலும் வணங்கத் தெரிந்திருக்கிறோம் என்றால், அது என்ன சார். அது நம் நாட்டு மிருகமே இல்லையே அரேபியர்களிடமிருந்து வந்த தாயிற்றே என்பிர்கள். எங்கிருந்து வந்தாலும் அது இந்தியாவில் நிலைத்து நின்றிருக்கிறதே. நம் வீடுகளில் வளக்கும் மாட்டை போல் மனிதனுக்கு உழைக்கும் உழைப்பாளியாக அல்லவா குதிரை இருக்கிறது. நன்றி மறவாத நாயுடன் போட்டியிடும் வரிசையில் மனிதனுக்குத் தோழனாகவும் அமைகிறதே. இம்மட்டோ அழகு நிறைந்த உடலும், அறிவும் அடக்கமும் நிறைந்த உள்ளமும் உடையதாகவும் இருக்கிறதே. பல்லாயிர வருஷ காலமாக மனிதனை சுமந்து அவன் ஆடும் வேட்டையிலும் அவன் விளையாடும் விளையாட்டுகளி லும் கலந்துகொள்வதுடன் அவன் வீரம் எல்லாம் வெளிப் பட போர்க்களம் வரையிலும் அவனை இட்டுச் சென்று துணை நின்றிருக்கிறதே! அத்தகைய தொரு விலங்கினை தெய்வமாக வழிபட மறப்பார்களா தமிழர்கள்.

ஆம் குதிரை வடிவிலும் பரந்தாமனை வணங்கினார் கள். அவ்வடிவிற்கே ஹயக் கிரீவன் என்று நாம கரணம் சூட்டியிருக்கிறார்கள். திருப் பாதிரிப் புலியூரை அடுத்த திருவஹீந்திரபுரத்திலே மலை மீது ஏற்றி இருத்தி வைத் திருக்கிறார்கள். இவ்வடிவையுமே பார்த்திருக்கிறீர்கள் பக்கத்திலே.