பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்


இந்த உலகமே ஒரு சுழற்சியில் வசப்பட்டது தானே. அதனால் உலகில் உள்ள எல்லா உயிர்களும் ஆடத்தானே செய்ய வேண்டும். உலகம் ஆட, உயிர்கள் ஆட, மேரு பர்வதம் போன்ற பெரிய பொருள்களும் ஆட விசால மான ஆகாசத்திலே அண்டங்களும் ஆடுகின்றன. இறைவன் ஆடும் போது அப்போது உள்ளத்தோடு உள்ளமாய் கலந்து நிற்கும் விநாயகரும் ஆடுகிறார் என்கிறார் அதிகார அடிகள்.

நிலந்துளங்க, மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்க சப்பாணி கொட்டும் - கலந்து உளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கட தடத்து

மாமாரி ஈன்ற மணி

என்பது தானே பாட்டு. இந்த அற்புத தத்துவத்தை விளக்கும் அழகிய திரு உருவம் தான் நர்த்தன விநாயகர்.

இன்னும் அவரையே, மூவிக வாகனத்தில் ஏறி சவாரி செய்து கொண்டு அவசரம் அவசரமாக எங்கேயோ ஒடும் கோலத்திலும் காணலாம். அப்படி ஒடும் கணபதி தான் வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயில் கல்யாண மண்டபத் திலே ஒரு கல்தூணிலே இருக்கிறார். அந்த கல்யாண மண்டபத்துச் சிற்பங்களை எல்லாம் கண்டு களித்த மேலை நாட்டு ரஸிக வைஸ்ராய் ஒருவர் மண்டபத்தையே பெயர்த்து, துரண்களை எல்லாம் எடுத்து கப்பல் ஏற்றி, ஆங்கில நாட்டுக்குக் கொண்டு போய் அங்கே மண்டபத்தைத் திரும்பவும் கட்டி முடிக்கத் திட்டமிட்டு விட்டார். இந்த திட்டம் நிறைவேறாமல் போகத்தான் இத்தனை விரைவில் இந்த பிள்ளையார் ஒடியிருக்க வேண்டும். திட்டமிட்டபடி கப்பல் வந்து சேரவில்லை. கல்யாண மண்டபமும் கப்பலில் ஏற வில்லை, எல்லாம் இந்த மூவிக வாகனர் செய்த வேலை காரணமாகததான்.