பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

39

இருக்கும் இடத்தையும், அதைப் பெறும் வகையையும் எடுத்துரைக்கிறார். சிதம்பரத்திலே சமயகுரவர் மூவரும் கைசாத்திட்டு வைத்திருந்த அறையில் இருந்த திருமுறை அம்ப்லத்துக்கு வந்து விடுகிறது.

நாட்டுக்கு வேண்டும் அற்புதமான பாக்கள் அனைத் தும் கிடைத்து விடுகிறது நமக்கு. பொல்லாப் பிள்ளை யாரும் திருமுறை கண்ட பிள்ளையார் என்ற புதிய பட்டத்தையும் தட்டிக்கொண்டு போய் விடுகிறார். நாடு நலம் பெற, காகம் கவிழ்த்து காவிரி கொணர்ந்தவரே, மக்கள் உள்ளம் இறைவனிடம் ஈடுபடத் திருமுறைகளை யும் தேடியெடுத்துக் கொடுத்து விடுகிறார்.

கணபதியின் பிள்ளைவிளையாட்டிலே சிறந்தது கஜமுகாசுரனை வென்றது தான். அசுர குலத்திலே, மாகத முனிவருக்கும் விபுதைக்கும் மகனாக கஜமுகாசுரன் பிறக்கிறான். வழக்கம் போல் தேவர்களை எல்லாம் துன் புறுத்துகிறான். தேவர்கள் சிவனிடம் முறையிடுகிறார்கள். தேவர் குறை தீர்க்கத் திரு உளம் கொண்ட சிவபிரான், தன்னுடைய அம்சத்திலே கணபதியைச் சிருஷ்டிக்கிறார். -

யானை முகத்தோடும், ஐந்து திருக்கரங்களோடும், மூன்று திருக்கண்களோடும் அவதரித்த இந்தப் பிள்ளை யைச் சிவகணங்களுக்கு எல்லாம் தலைவனாக்குகிறார் சிவபெருமான். கணங்களுக்கு எல்லாம் தலைவனாய் அமர்ந்த கணபதி கஜமகாசுரனுடன் போர் தொடுக்கிறார். கஜமுகனே எத்தனையோ மாயைகளை நிகழ்த்தி கடும் போர் புரிகிறான். கடைசியில் பெருச்சாளி வடிவோடு வந்த போது, அவனை அடக்கி அவன் மேலேயே ஆரோ கணித்து, தன்னை அன்று முதல் சுமக்கச் செய்து விடுகிறார்.