பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
பாரத சமுதாயம் -
கலைகள்
பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய!

என்று கவியரசர் பாரதியார் சென்ற அரை நூற்றாண்டிற்கு முன்பே கட்டியங் கூறி பாரதசமுதாயத்தை வாழ்த்தியிருக்கிறார். இப்படித்தான் இமயம் முதல் குமரி வரை, துவாரகை முதல் காமரூபம் வரை பரந்து கிடக்கும் இந்தப் பாரத சமுதாயம் ஒரே நாடு, அதில் வாழ்பவர்கள் எல்லாம் ஒரே இனத்தவர் என்ற ஒருமைப்பாட்டுணர்ச்சி மக்கள் உள்ளத்தில் வளர வகை செய்திருக்கிறார்.

பாரத பூமி பழம் பெரும் பூமி
நீரதன் புதல்வர்; இந் நினைவகற்றாதீர்

என்று இந்த அகண்ட பாரதத்திலுள்ள மக்களை எல்லாம் கூவிஅழைத்துக் குரல் கொடுத்திருக்கிறார்.

அத்தகைய அகண்ட பாரதத்தின் பண்புகள், கலைகள், நாகரிகம், கலாச்சாரம் எல்லாம் ஒரே படித்தாய் உருவாகி வந்திருப்பதும் நாம் அறிந்ததே.

11