பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

அவற்றில் கலைகள் இந்தப் பாரத சமுதாயத்தில் எப்படி உருப்பெற்று வளர்ந்திருக்கின்றன என்பதைப் பற்றியே ஒரு பேச்சு இன்று.

முதலில் கலைகள் என்றால் என்ன? என்று ஒரு சிறு விளக்கம் தெரிந்து கொள்ளலாம். 'கடவுள் என்றால் யார்?' என்று கேட்டால் கூட எளிதில் சுட்டிக்காட்டி விடலாம் போல் இருக்கிறது. கலை என்றால் என்ன என்று சொல்வது எளிதாக இல்லை. கலை என்றால் அழகின் சாஸ்திரம் என்பார் ஒருவர். அழகுணர்ச்சிக்குத் திருப்தி அளிக்கக் கூடிய தெல்லாம் கலை என்பார் இன்னொருவர். கலை என்பது அழகு ணர்ச்சியிலே பிறந்து அவனுக்கு ஆனந்தம் அளிப்பது என்பார் மூன்றாவது நபர். இந்த விளக்கங்கள் எல் லாம் கலை என்றால் என்ன என்று விளக்கி விடுகின்றனவா என்ன?

இறைவனது அருளைத் துணை கொண்டு மனிதன் தனது, கற்பனையினால் சிருஷ்டிப்பதுதான் கலை. கலை என்பதற்கு கற்பனா சிருஷ்டி. சிந்தனை செய்கின்ற மனிதன், கற்பனாசக்தியாகிய புஷ்பக விமானத்தில் ஏறி ஆகாய வீதிகளில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகிறான், இந்த 'விதமாக சிந்தனையில் பிறக்கின்ற கற்பனா சிருஷ்டியைச் சப்த சித்திரத்திலும், வர்ணப் பூச்சுகளிலும் கல்லுருவங்களிலும் பரிணமிக்கும்படி செய்கின்றவன் எவனோ அவனே கவிஞன், அவனே ஓவியன், அவனே சிற்பி, அவனது சிருஷ்டியே கலை. கலை உண்மைக்கும் உலகியலுக்கும் மாறுபட்டதன்று. உலகியலில் காணுகின்ற உண்மைகளை எடுத்துக் காட்டி, மக்கள் உள்ளத்தில் எழும்

12