பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

பாரத சமுதாயத்தில் கவிதைக் கலை எப்படிச் சிறப்புற்றிருந்தது என்று முதலில் தெரிந்து கொள்வோம். வேதங்கள் மிக மிகத் தொன்மையானவை, அவைகளில் ரிக் வேதம் முழுவதும் கவிதையாகவே உருவாகியிருக்கிறது என்பர். அதன் பின் இதிகாச காலத்தில் வான்மீகரது ராமாயணமும் வியாசரது மகாபாரதமும் நல்ல கவிதைகளில் உருவான காவியங்கள். துளசி தாஸரது ராம சரித்திர மானஸ், அதன் பின் எழுந்த மீராபாய் பஜன், கபீர் தாஸரது பாடல்கள் எல்லாம் ஹிந்தியில் எழுந்த கவிதைகள். மராத்திய நாட்டிலே துக்காராமும், ஆந்திர நாட்டிலே வேமன்னாவும், சிறந்த கவிதைகள் எழுதிய கவிஞர்கள் என்பர். இப்படி வட நாட்டிலே கவிதை வளர்ந்த போது தென் தமிழ் நாட்டில் சங்க காலத்துப் புலவர்களும், சிலப்பதிகாரம் முதலிய பஞ்ச காவியம் எழுதிய கவிஞர்களும் நல்ல கவிதையை வடித்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பின்தான் கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சேக்கிழாரும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் அருமையான கவிதைகளை உருவாக்கி கவி உலகை வளப்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் எழுந்தவர்கள் புலமைமிக்கவர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய சிறந்த கவிதையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. நம்முடைய பரம்பரையிலே கவியரசர் பாரதியும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் ஒப்பற்ற கவிஞர்களாக விளங்கியிருக்கிறார்கள். இதே. இருபதாம் நூற்றாண்டில் புகழ் பெற்ற கவியரசர் ரவீந்திரரும் அற்புதம் அற்புதமான கவிதைகள் இயற்றியிருக்கிறார். இத்தனை கவிஞர்களும் பாரத சமுதாயம் ஒரே நாடு என்ற உணர்வு

14