பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எங்கே கடவுள்?

வழிபாடு, தொழுதல், வேண்டுதல், பூசனை அனைத்தையும் விட்டொழி; கோயிலுள்ளே கதவடைத்து யாரைத் தேடி நீ அலைகிறாய்? இருளில் புகுந்து மனத்துள்ளே யாரைக் குறித்து வழிபடுகிறாய்? கண்ணைத் திறந்து நன்றாகப்பார். கடவுள் உன் இல்லத்தில் இல்லை. உழவர் உழன்று பயனைக் காணும் வயல் வெளியில் வாழ்கிறார் அவர் உடல் வருந்தக் கல்லை உடைத்து சாலை அமைப்போரிடம் அவரைப்பார். வெயில் மழையிலும் அந்த ஏழை எளியவருடன் புழுதியில் அவர் பணி செய்வதைக் காண்!

உனது துவராடையை களைந்து எழுந்து வா! அவரைப் போல் நீயும் புழுதியில் உழலடா! வீடு, வீடு எங்குளது விடுதலை. எது வீடு? கடவுளே தன் படைப்பில் கட்டுண்டு இருப்பதைப்பார்? தியானத்தைக் கட்டி வை: பூக்குடலையைப் புறம்தள்வது! கிழிந்த கந்தலாகட்டும் உன் ஆடை தூசி படிந்து அது அழுக்கு ஏறட்டும். தொழில் புரியும் அவருடனே நீயே ஒன்றியே உழைத்திடுவாய்; நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்ட பாடுபடு. -கீ