பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

47


நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் என் தலைவியின் வீட்டில் உள்ளது.

-நா

எனது வாழ்வு மொட்டாய் அரும்பியிருந்த காலமொன்றும் இருந்தது. அதன் மனமெல்லாம் ஒரு பக்கத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.

- தோ

உலகம் என் கண்முன் ஒரு சித்திரக் குவியலாகவே காட்சியளிக்கிறது; எனது ஆன்மா, இசையால், மனம் உருகவே பதிலளிக்கிறது.

-மி.மி

மனித நெஞ்சம் ஒரு விரிந்த பாழ்நிலம். கிளைகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு குழந்தையை ஆட்டுவதைப் போல இருளைத் தொட்டியிலிட்டு ஆட்டுகிறது.

- நினை

பொன்மாலைப் படுஞாயிறு இசைக்கும் இசையிலும் ஒதுக்க முடியாத இருட்டுக்கு அது அளிக்கும் புகழ்ப் பாடல்களிலும் இரவின் முகவுரை தொடங்குகிறது.

-ப.ப

உண்மையை அடைவதற்கு எதுவும் அதிக விலை யில்லை என்பது அன்பின் வலுவான முடிவு.

- எ.எ