பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-10-

மிகையான ஒரு கூற்றாக இல்லை என்பதை, இதன்‌ பல்வேறு பட்ட வளர்ச்சி நிலைகளையும்‌ அவை தொடர்ந்த பிறமொழித்‌ தோற்றங்களையும்‌, அறிவுக்‌ கசடின்றி அறிந்து கொண்டவ வர்களே உணர முடியும்‌. காலத்தாலும்‌ அறிவாலும்‌ நன்கு காத்துப்‌ புரக்கப்‌ பெற்ற மொழி தமிழாகலின்‌, அஃது உலகிலுள்ள மொழிகளை விட திட்பழும்‌ நுட்பமும்‌, செழுமையும்‌ முழுமையும்‌ நிறைந்து விளங்குவதை இக்கால்‌ எல்லா மொழியினரும்‌ உணர்ந்து வருகின்றனர்‌. அஃது ஒரு வரலாற்றுப்‌ பெட்டகம்‌ போல்‌ இருந்து, மாந்தனின்‌ மன வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து அறிவுக்‌ கருவூலங்களையும்‌ உள்ளடக்கிக்‌ கொண்டுள்ளது. அது கரணியப்‌ பொருளாய்‌ நின்று உள்ளுணர்வொடு கலந்து, அகக்கரண வளர்ச்சிக்கும்‌, கருமப்‌ பொருளாய்‌ விளங்கி, உறுப்பொடு கலந்து நின்று, புறக்கரும வளர்ச்சிக்கும்‌ அடிப்படையாகவிருக்கின்றது.

4:0 மொழியும்‌ இனமும்‌:

41: பெரும்பாலும்‌ மொழிவளர்ச்சி, அது பேசப்‌ பெறும்‌ இனத்தின்‌ வளர்ச்சியை ஒட்டியே அமைவதாகலின்‌ தமிழின வளர்ச்சி தடைப்பட்ட பொழுதெல்லாம்‌, தமிழ்‌ மொழியின்‌ வளர்ச்சியும்‌ தடைப்பட்டே வந்திருக்கின்றது. தமிழினத்தில்‌ வேற்றினக்‌ கலப்பு ஏற்பட்ட பொழுதெல்லாம்‌, தமிழ்‌ மொழியிலும்‌ பிற மொழிக்‌ கலப்பு ஏற்பட்டு வந்திருக்கின்றது.

4. சமசுக்கிருதத்தில்‌ ஐந்திலிரு பகுதி முழுத்‌ தமிழ்ச்‌ சொல்‌.

ஐந்திலிரு பகுதி வேரினின்றி திரிந்த திரிசொல்‌. ஐந்திலொரு பகுதி இடுகுறிச்‌ சொல்‌. - தமிழர்‌ மதம்‌ - பாவாணர்‌

தெலுங்கு : நான்‌ - நேனு ஆம்‌ - அவனு நெருப்பு - நிப்பு

நாம்‌ - மேமு ஆகாது - காது செருப்பு -செப்பு

அது - அதி அழுத்து - அத்து பருப்பு - பப்பு

அவை - அவி உருக்கு - உக்கு விருந்து -விந்து.