பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



-16-

எண்ணம் வலுபெற வலுப்பெறப் பேச்சும் விளங்கித் தோன்றுவதும் ஊன்றிப் பார்க்கையில் மொழிக்கும் எண்ணத்திற்கும் உள்ள தொடர்பு விளங்கும்.

10: 2: இனி, ஒருவர் எத்துணையளவு உலகியலறிவு வாய்ந்தவராயிருப்பினும், மொழித் திறனற்று விளங்குவாரானல், அவரால் இலக்கியத்தைச் சமைக்கக் கூடுமோ? கூடாதாம் என்க. இனி, அவ்வாறின்றி மொழித்திறனுள்ள ஒருவர் உலகியலறிவு சிறிதே வாய்க்கப் பெற்றிருந்தாலும் கூட, அவர் ஒரளவு இலக்கிய வாக்கத்தில் சிறந்திலங்க முடிவதைக் காண்கின்ருேம். எனவே இலக்கிய வாக்கத்திற்கு வேறு பல திறன்கள் வேண்டுவன. எனினும், மொழித்திறன் இன்றி இலக்கிய வாக்கமே நடவாது எனலாம். இங்கு, ஒருவர் ஒரு மொழியைத் தெரிந்து கொள்ளுதல் வேறு, அவர் அம்மொழியில் திறனுடையராதல் என்பது வேறு என அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

10: 3: மொழியை அடியூன்றிக் கற்கக் கற்கவே இலக்கிய வாக்கம் பெருகும். மொழியைக் கற்றல் என்பது அம் மொழி அளாவி நிற்கும் இலக்கண இலக்கியங்களைக் கற்றலும், அம்மொழியில் உள்ள வேறு பல துறை நூல்களைக் கற்றலும் ஆகும். வெறும் மொழியே எப்படி இலக்கியம் ஆகிவிடாதோ, அப்படியே வெறும் எழுத்தே மொழியாகி விடாது. ஒருவர் கற்கும் ஒருமொழி நூல்களுள் அம்மொழி தன் மெய்ந்நிலையோடு இயங்கவில்லையானல் அவர் அந்த மொழியை அறிந்து கொள்ளுதல் எப்படி?

11 : 0: இலக்கிய வாக்கமும் மொழி வளர்ச்சியும்:

11: 1: உயிரும் உடலும்போல் மொழியும் இலக்கியமும் ஒன்றையொன்று ஒட்டி உயிர் வாழ்வனவாகும். மொழியுயிர்ப்பு இருந்தால்தான் இலக்கிய வுடல் இயங்கி வாழ்ந்து கொண்டிருக்கும். இலக்கிய உடலைப் பற்றிக் கொண்டுதான் மொழியும் இவ்வுலகில் இயங்குதல் வேண்டும். மொழி இறந்து