பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

இலங்கைக் காட்சிகள்

விமானத்துக்குள் நுழைந்து அமர்ந்தேன். விமானம் புறப்படுவதற்கு முன் பப்பர்மிட்டும் பஞ்சும் கொடுத்தார்கள். பப்பர்மிட்டு வாயில் அடைத்துக்கொள்ள; பஞ்சுகாதில் அடைத்துக்கொள்ள. உட்காரும் ஆசனத்தில் இருந்த வாரைப் பூட்டிவிட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களையெல்லாம் பார்க்கிறபோது ஏதோ சர்க்கஸ் வேடிக்கைக்குத் தயார் செய்வதுபோல் இருந்தது. காதில் உள்ள ஜவ்வுக் கெட்டுப்போகும்படி விமானம் சத்தம் போடும் என்று நினைத்தேன். விமானம் புறப்படும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

விமானம் தரையில் ஓடத் தொடங்கியது. விமானத்தின் ஓட்டம் சிறிது அதிகமாயிற்று. பிறகு இரைச்சல் மிக மிக அதிகமாயிற்று. ஓட்டமும் படுவேகமாக இருந்தது. வேகமாக ஓடிக்கொண்டிருந்தபோதே அது மெல்ல மேலே எழுந்தது. அப்படி மேலே எழும்பும்போது ஒரு தனியான அநுபவம் உண்டாயிற்று. அந்த மாதிரியான அநுபவத்தை முன்பே நான் அடைந்திருக்கிறேன் என்று தோன்றியது. எங்கே எப்படி அந்த அநுபவம் எனக்கு முன்பு உண்டாயிற்று? யோசித்துப் பார்த்தேன்.

பல சமயங்களில் நான் பறப்பதாகக் கனவு காண்பதுண்டு. நின்ற இடத்தில் நின்றபடியே இரண்டு கைகளையும் விரிப்பேன் காலை ஓர் உந்து உந்துவேன். கிர்ரென்று மேலே பறந்து விடுவேன். இப்படி எத்தனையோ தடவை நான் கனாக் கண்டிருக்கிறேன். அடுத்தடுத்துப் பறப்பதாகக் கனவு காண்பதில் ஏதோ விசேஷம் இருக்கவேண்டும் என்று நினைத்