பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

இலங்கைக் காட்சிகள்

காரணம், இலங்கை நமக்கு அந்நிய நாடு. இன்று இந்தியா சுதந்தரம் பெற்றிருக்கிறது. அப்படியே இலங்கையும் சுதந்தரம் பெற்று விட்டது. உலகம் முழுவதும் இந்தியாவையும் இலங்கையையும் ஒன்றுகவே ஜனங்கள் எண்ணுகிருர்கள். நாம்கூட, சமயத் தொடர்பாலும் பழக்கவழக்க ஒற்றுமையாலும் இலங்கையும் இந்தியாவும் சொந்தமுள்ளன என்று எண்ணுகிறேம். ஆபிரிக்காவையும் சீனவையும் ஆஸ்திரேலியாவையும் நினைக்கும்போது வேற்று நாடாகவே நினைக்கிருேம். நேற்றுவரைக்கும் நம்மோடு சேர்ந்திருந்த பர்மாவைக்கூட வேற்று நாடென்றே நினைக்கிறோம். ஆனால் இலங்கையை நினைக்கும்போது அத்தகைய நினைவு வருவதில்லை. அக்கா தங்கைகளின் வீடாகவே கருதுகிறோம்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முன் காலத்தில் ஆயிரக்கணக்கான கூலிகள் போனார்கள். இங்கே தொழில் செய்ய வகையில்லாமல் அல்லற்பட்ட ஏழைகளெல்லாம் இலங்கைக்குப் போனார்கள். இலங்கையென்று சொல்வதில்லை. கண்டி தேசம் என்றுதான் சொல்வார்கள். கங்காணிமார்கள் மூலம் கண்டிக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் பரவியிருந்தது. கங்காணிமார்களும் எப்படியாவது இந்தியத் தொழிலாளர்களை இலங்கைக்குக் கொண்டு போவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் இந்தியத் தொழிலாளிகள் வடித்த வேர்வையில் வளம் பெற்றன. அந்தக் காலத்தில் வெள்ளைக்கார முதலாளிகள் தோட்டங்களுக்கு உடையவர்களாக இருந்தார்கள். இந்தியத் தொழிலாளர்கள் நன்றாக வேலை செய்-