பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

வேற்றி வருகிறார்கள். அவைகளைப் பத்திரிகைகளிலே ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அவர்கள் அறிமுகப்படுத்துகின்றபொழுது, அதைக் கண்டு உண்மையிலேயே நான் மகிழ்ந்து போவேன். ஏனென்றால், நம்மில் பல பேருக்குச் சம்பாதிக்கத் தெரியும். ஆனால், உரிய முறையில் சம்பாதித்த பணத்தை எப்படிச் செலவு செய்வது என்பது தெரியாது. அந்த சூட்சமத்தை நன்கு தெரிந்து கொண்டிருக்கும் நல்ல இதயங்கள் இந்த நகரத்தில் குறிப்பாக, இந்த அமைப்பிலே இருப்பதை எண்ணி நான் பெரு மகிழ்வடைகிறேன்.

'மீலாது விழா' ஏன்?

அது மட்டுமல்ல, துபாயில் இருக்கக்கூடிய சமய நல்லிணக்க உணர்வு படைத்த இந்த மக்கள் உரத்த சிந்தனையாளர்கள் என்பதும் தெரியும். நீங்களெல்லாம் ஏதோ விஷயம் தெரியாமல் இங்கு வந்து குழுமியிருப்பது போலவும், நான் ஏதோ விஷயங்களையெல்லாம் தெரிந்து உங்களுக்குச் சொல்ல வந்திருப்பது போலவுமான ஒருவித மனப்பிரமை இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எல்லா வகையிலும் உரக்கச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்; காலத்தினுடைய போக்குக்கும் தேவைக்குமேற்ப, எந்த முறையில் இஸ்லாமியச் சிந்தனைகளைச் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலே உங்களுக்கு எப்போதும் ஒரு துடிப்பு உண்டு என்பதை நான் நன்கறிவேன். அப்படிப்பட்ட நல்ல இதயங்களோடு ஒரு சில மணித்துளிகள் உறவாடி மகிழ்வதை நான் பெருமையாகவும், பெரும் பயன் எனக்குத் தருவதாகவும் கருதி நான் இங்கே வந்து நிற்கிறேன்.


எனக்கு முன்னால் இங்கே பேசிய மார்க்க அறிஞர்கள் 'மீலாது விழா' கொண்டாட வேண்டிய அவசியத்தைப் பற்றி மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள். 'மீலாது விழா' என்பது சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் தொடங்கப்பட்ட விழா. விடுதலைப் போராட்ட காலத்தில்