பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


அண்மையிலே 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்' என்று ஒரு புத்தகம் எழுதியிருந்தேன். அந்நூலின் அச்சுப்படியை முன்னாள் மத்திய அமைச்சரும் மகாராஷ்டிர ஆளுநருமாக இருந்த திரு சி. சுப்பிரமணியம் அவர்களிடத்திலே கொடுத்து அதற்கு முன்னுரை எழுதித் தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். அவர்கள் இந்நூலை மகிழ்வோடு வாங்கிக்கொண்டார்.

திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் என்மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர். அந்நூலை அவர் பத்து நாட்களில் படித்துவிட்டு, தொலைபேசியில் என்னை அழைத்தார். அப்போது அவர், "நூலின் முன்னுரையை எழுதிவிட்டேன். இப்படிப்பட்ட ஒரு நூலை சில ஆண்டுகட்கு முன்னதாக நீங்கள் எழுதியிருந்தால் எவ்வளவோ தீமையான காரியங்கள் நடைபெறாமல் தடுத்து இருக்க முடியும். எவ்வளவோ உணர்வுகள் தவறான பாதையில் செல்லாமல் தடுத்திருக்க முடியும். உங்கள் நூல் அப்படிப்பட்ட செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. நீங்கள் வந்து உங்கள் நூலுக்கான முன்னுரையை பெற்றுச் செல்லுங்கள்" என்று பணித்தார். இஸ்லாம் பிற சமயங்களுக்கு மதிப்பளிப்பதையும் அனைத்து விவகாரங்களுக்கும் அப்பால் மனித நேயம் மாண்புற இஸ்லாம் வகுத்தளித்த நெறிமுறைகளையும் வெகுவாகப் பாராட்டி முன்னுரை எழுதியிருந்தார்.

தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்

இஸ்லாத்தை உரிய முறையில் மற்ற சமயத்தவர்களிடையே எடுத்து வைக்காததினால் நம்மைப் பற்றித் தவறான உணர்வுகள், கருத்துகள் எங்கும் பரப்பப்பட்டுள்ளதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்நிலை இங்கு மட்டுமில்லை, மேனாடுகளில், சிலுவைப் போருக்குப்பின், மிகத்தவறான பிரச்சாரம், அரசுகளின் ஆதரவோடு பரப்பப்பட்டது. மக்களின் மனதிலே இத்