பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

பெற்றெடுக்கவும் இல்லை. அவனுக்கு இணையுமில்லை; துணையுமில்லை. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணங்குதற்குரியவன் வேறு யாருமில்லை; என்று மக்களிடம் உபதேசித்து வந்தார்கள். விக்கிரக ஆராதனை செய்யும் குறைஷிகள் இப்பிரச்சாரத்தை அறவே விரும்பவில்லை. ஆனால், அண்ணலார் தன் ஓரிறைப் பிரச்சாரத்தை நிறுத்தவே இல்லை.


குறைஷிகளில் சிலர் இப்பிரச்சினையை வேறு விதமாக அணுகத் தொடங்கினார்கள். அக்காலத்தில் அவர்களிடையே பெரும் மேதையாகத் திகழ்ந்தவர் அபுல் ஹிகம் என்பவராவார். அபுல் ஹிகம் என்றால் 'அறிவின் தந்தை' என்பது பொருள். அவர் வாதத் திறமைமிக்கவர். அவரை அண்ணலாரிடம் அனுப்பி ஓரிறைப் பிரச்சாரத்தை நிறுத்தவும் விக்கிரக ஆராதனையைப் பெருமானாரை ஏற்குமாறு செய்யவும் முயற்சி மேற்கொண்டனர். குறைஷிகளின் விருப்பத்திற்கிணங்க இது தொடர்பாக அபுல் ஹிகம் பெருமானாரை அணுகி விவாதிக்கலானார்.


பெருமானார் (சல்) அவர்களின் மனதை மாற்றும் வகையில் தன் விவாதத்தைத் தொடங்கினார் அபுல் ஹிகம்,


"ஒரே இறைவன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவ்விறைவன் எங்கும் உள்ளான் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று பெருமானாரை நோக்கி வினாத்தொடுத்தார்.


"ஆம், இறைவன் எங்கும் நிறைந்துள்ளான்" என்றார். அண்ணலார் அவர்கள்,

"அவ்வாறாயின் எங்குமுள்ள இறைவன் இக்கற்சிலைக்குள்ளும் இருக்கலாமல்லவா?" என்று எதிர்வினாத் தொடுத்தார் அபுல் ஹிகம்.

புன்முறுவல் பூத்தபடி பெருமானார் "கல்லுக்குள் இருப்பதாக நீங்கள் நம்பும் இறைவன், அவன் படைப்பான