பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

உங்களுக்குள்ளும் இருக்கலாமல்லவா?" என அண்ணலாரும் எதிர் வினாத் தொடுத்தார். "நிச்சயமாக என்னுள்ளும் இறைவன் இருக்கிறான்" எனப் பதிலளித்தார் அபுல் ஹிகம்.

"அப்படியானால் உங்களுக்குள் இருக்கும் இறைவனைத் தேடாமல் எங்கோ இருக்கும் கல்லுக்குள் ஏன் இறைவனைத் தேடி அலைகிறீர்கள். உங்களுக்குள் இருக்கக் கூடிய இறைவனது தன்மையை - இறைவனது சக்தியை, இறைவன் உங்களுக்களித்த ஆத்மாவின் ஆற்றலை, உய்த்துணர்ந்து, அதனை முழுமையாக வெளிக்கொணர்ந்து, அதனை வாழ்க்கையில் பயன்படுத்தி, இறையுணர்வோடு ஒன்றி, இறை நெருக்கம் பெறும் ஆற்றலைப் பெற்று, இறையருளைப் பூரணமாகப் பெற்றுய்யலாமே" என்று பெருமானார் (சல்) அவர்கள் விளக்கிக் கூறியதைக் கேட்ட, 'அறிவின் தந்தை'யாகப் போற்றப்பட்ட அபுல் ஹிகம்' "இதுதான் சத்தியவாதம் - உண்மை" என உணர்ந்து இறுதித் தூதரையும் அவர் மூலம் வெளிப்பட்ட இறைச் செய்தியையும் போற்றிச் சென்றார் என்பது வரலாறு.

உள்ளத்துள் பொதிந்துள்ள ஆத்மாவின் ஆற்றலை அறிந்துணர்வது எப்படி?

ஒரு இருட்டறையில் ஒரு பொருள் உள்ளது. இருளடர்ந்த அவ்வறையில் உள்ள பொருளைத் தெளிவாகக் கண்டறிய வேண்டுமானால், அவ்வறையினுள் வெளிச்சாத்தைப் பாய்ச்ச வேண்டும். அறையினுள் வெளிச்சம் செல்லச் செல்ல இருள் அகலும், உள்ளிருக்கும் பொருள் தெளிவாகத் தெரியும். இத்தகு ஒளியையே 'உள்ளொளி' என்று கூறுவர். ஆத்மாவினுடைய அந்தரங்கமான இவ்வாற்றலை அறிந்துணர வழிகாட்டும் உள்ளொளியைக் கொண்டு, கன்மம், மாயை என்று சமஸ்கிருதத்திலும் தமிழில் கூறப்படும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்ற அறியாமைக் குணங்களை, அறிவு என்னும் உள்ளொளி கொண்டு போக்க வேண்டும். அப்போது நம்