பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


எல்லா நாடுகளிலும் எல்லா இனங்களிலும் எல்லா மொழிகளிலும் தோன்றிய இறைத் தூதர்கள் அனைவரும் ஆன்மீகம் பற்றி மட்டு பேசியிருக்க, இறுதித் தூதராக அமைந்த நபிகள் நாயகம் (சல்) அவர்களும் இறுதி வேதமான திருக்குர்ஆன் திருமறையும் அறிவியலைப் பற்றி மிக அதிகமாக பேசுவதை நம்மால் நன்கு உணர முடிகிறது.

அறிவியல் பெட்டகம் அல்-குர்ஆன்

அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் அறிவியல் பூர்வமானவை. திருமறையாகிய திருக்குர்ஆன் அறிவியல் துறையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி, அறிவியல் ஆய்வுப் பெட்டகமாகவே விளங்கி வருவதாக இன்றைய விஞ்ஞான உலகம் வியப்போடு கண்டு வருகிறது.

மற்ற நபிமார்களெல்லாம் அகவாழ்வின் செழுமைக்கு ஆதாரமான ஆன்மீகம் பற்றியே பேசியிருந்த போதிலும் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அகவாழ்வுக்கு ஆதாரமான ஆன்மீகத்தைப் பற்றி பேசியதோடு புறவாழ்வில் வளமான வளர்ச்சிக்கு ஆதார சுருதியாக அமைந்துள்ள அறிவியல் பற்றிப் பேசி மனித வாழ்வை நிறைவு செய்துள்ளார்.

இன்றைக்கு விஞ்ஞானம் வானளாவ வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றைக்குச் செய்தித் தொடர்பில் ஏற்பட்டுள்ள மாபெரும் வளர்ச்சி உலகத்தை மிகக் குறுகிய வட்டத்திற்குள் கொண்டுவந்து விட்டது. பரந்து கிடக்கும் உலகம் மிகச் சிறு கிராமம் போல் இன்று காட்சியளிக்கிறது. வளர்ந்து வரும் கணினித்துறை உலகை உள்ளங்கையில் சுழலச் செய்கிறது. அந்த அளவுக்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி உலகிலுள்ள பல பெரும் மதங்களை ஆட்டங்காண வைத்துள்ளது. சில சமயங்களுடைய