பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

ஆதரிப்பதோடு வலுவாக வளர்ப்பதற்கான வழிவகைகளையும் கூறி வழிகாட்டுகிறது.

ஒரு வகையில் பார்த்தால் திருக்குர்ஆன் திருமறை முழுவதும் அறிவியல் அடிப்படையிலேயே பேசுகிறது எனக் கூறலாம். இதை நான் ஏதோ இஸ்லாத்தை, இறைமறையை, பெருமானாரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை.

திருக்குர்ஆனில் எந்த ஆயத்தை எடுத்துக் கொண்டாலும் அது 'சைன்டிஃபிக் அப்ரோச்' எனப்படும் அறிவியல் கண்ணோட்டத்தோடு, அறிவியல் அணுகுமுறையோடு அமைந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம். ஆனால், அந்தக் கண்ணோட்டத்தோடு நாம் திருமறை வசனங்களை அணுகுவதே இல்லை.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு இருக்கிற அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இஸ்லாமியத் திருமறையான திருக்குர்ஆன் இறை வசனத் தொகுப்பு முழுமையாக ஆதரிக்கிறது. ஆதரிப்பது மட்டுமல்ல, ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சி போதாது; இன்னும் மேற்கொண்டு வெகுதூரம் போக வேண்டும். மிகு வளர்ச்சி காண வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்துவதோடு, விரைந்து விஞ்ஞான ஆய்வில் ஈடுபட கட்டளையிடுகிறது.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி திருக்குர்ஆனிலே சொல்லப்பட்டிருப்பதிலே பத்து சதவீதம் கூட உலகினரால் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் எப்படிப்பட்ட இஸ்லாமிய அறிவியல் நுட்பங்களையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வளர்ந்து வரும் அறிவியல் போக்கு இன்று உலகெங்கும் ஒரு புதிய போக்கு உருவாகி உரம் பெற்று வருகிறது. அதுதான் எந்தவொரு சிறு விஷய