பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

பெயரைக் கொண்டு - அவரையொரு கிருஸ்தவராகவே கருதுகின்றார்கள். நான் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவன். பலரும் நினைப்பது போல் அவர் கிருஸ்தவரல்ல. யூதர் - இருப்பினும் மோசஸ் என்றழைக்கப்படும் மூஸா (அலை) அவர்கட்கு முன்னதான முதல் இடத்தைப் பெருமானார் (சல்) அவர்கட்கு வழங்கியதற்கு அவர் கூறும் காரணங்கள் உலகத்தவரின் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. அதாவது ஆய்வு முடிவு அறிவுலகத்தை வியப்பிலாழ்த்தியது. பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, இறுதி முடிவாக, பெருமானாரால் நேற்றைய உலக வரலாறு மாறியது, இன்றும் மாறிக் கொண்டுள்ளது; நாளைய உலக வரலாறும் அவரது செல்வாக்கால் மாறும். இவ்வாறு நேற்றை, இன்றைய, நாளைய உலக வரலாற்றின் மாற்றத்துக்கு அச்சாணியாக விளங்கவல்லவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களே என்பதை காரண, காரியங்களோடு உலகுக்கு உணர்த்தியவர்; மெய்ப்பித்துக் காட்டி, தன் வாதத்தை நிலை நிறுத்தியவர்.

அவரோடு அண்மையில் பால்டிமோரில் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு செய்தியைச் சொன்னார்: "நான் சமீபத்தில் கெய்ரோவில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அக்கூட்டத்தில் பேசிய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் இஸ்லாத்தை ஒரு ஆன்மீக மார்க்கம் என்ற அடிப்படையில் - உணர்வில் பேசினார்களே தவிர, அறிவியல் போக்கில் யாருமே பேசாதது எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இஸ்லாத்தில் ஆன்மீகம் ஒரு பகுதி மட்டுமே. மற்றபடி அறிவியல் போக்கிலான மார்க்கமே இஸ்லாம் என்பது எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமல்ல; உண்மையும் கூட. ஏனோ, இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் பக்கமே போக மாட்டேன் என்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் இஸ்லாத்தை விளக்கினால்