பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அல்லவா இஸ்லாத்தினுடைய சிறப்பு மட்டுமல்ல, பெருமானாரின் வாழ்வும் வாக்கும் எந்த அளவுக்கு உலகுக்கு வழிகாட்டும் தன்மையுடையதாக விளங்குகிறது என்பது புலப்படும். நீங்களாவது அந்தக் காரியத்தை முனைப்போடு செய்ய முன்வாருங்கள்' என்று கூறி எனக்கு, என் முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். மைக்கேல் ஹெச்-ஹார்ட் பேசும்போது உச்சரித்த "Islam is a scientific way of life" என்ற வாசகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு யூதராக இருந்தும் இஸ்லாத்தின்மீது இந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் உடையவராக இருப்பதோடு, தன் உள்ளத்து உணர்வுகளைப் பிசிறில்லாமல் பதிவு செய்ய முற்படும் அவரது நடுவு நிலைப்போக்கு, அவரின் மீது எனக்கு மிகுந்த மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது.

மைக்கேல் ஹெச் - ஹார்ட்டின் வேண்டுகோளை ஏற்கும் முறையில் நான் “அண்ணலாரும் அறிவியலும்” என்ற தலைப்பில் நூல் எழுதியிருப்பதை விவரித்தபோது, மகிழ்ச்சி பொங்க நம் இருவரின் சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருப்பதாகக் கூறிச் சிரித்தார்.

முழுமையாக அறிய முக்கோண வழிகள்

இஸ்லாத்தைச் சரியான கோணத்தில் தெளிவாக அறிய வேண்டுமானால் அதனை மூன்று கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அப்போதுதான் இறைநெறியாகிய இஸ்லாத்தை முழுமையாக அறிந்துணர முடியும். முதலாவது உளவியல், இரண்டாவது ஆன்மீகம், மூன்றாவது அறிவியல். இம்முக்கோண அணுகுமுறை மூலமே இஸ்லாத்தை முழுமையாக அறிய முடியும் என்பது என் திடமான நம்பிக்கை. அம்முறையிலேயே நான் இஸ்லாத்தை அணுகி அறிந்து கொள்ள முயன்று வருகிறேன்.

அவ்வாறு அறிய முற்படாவிட்டால் "தோள் கண்டார் தோளே கண்டார்; தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை