பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

கண்டாரும் அஃதே" என்று கம்பர் கூறியபடி ஒரு பகுதி மட்டுமே அறிந்தவர்களாவர் என்பது திண்ணம்.

இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ள சில நிகழ்ச்சிகளைச் சான்றுகளாகக் காட்ட விரும்புகிறேன்.

பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற கூரியர் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அது பன்னாட்டளவில் ஒருவார காலம் நடைபெறும் மாநாடு. வெள்ளக்கிழமையன்று முஸ்லிம் பிரதிநிதிகள் ஜும்மா தொழுகை தொழச் செல்ல வசதியாக காலையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மாநாட்டை முடித்து மாலையில் ஒரு மணிநேரம் தாமதமாக மாநாட்டைத் தொடருவோம். அப்படி ஒரு வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு பாரிஸ் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள மசூதிக்குச் சென்றுவிட்டு, மாநாட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்தபோது, எனக்கும் முன்னதாக வந்து அங்கே அமர்ந்திருந்த பிரேசில் நாட்டுப் பிரதிநிதி பெனடிக்டோ சில்வா என்பவர் என்னை நோக்கி, "நாங்களெல்லாம் வாரத்துக்கு ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குச் செல்கின்றோம். ஆனால், நீங்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுது இறைவணக்கம் புரிகிறீர்களே, இதனால் நேரம், சக்தி விரையமாகிறதே. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு நேரம் தொழுகை செய்தால் போதாதோ" எனப் பாமரத்தனமாகக் கேட்டு என்னையே பார்த்தார்.

அவர் இப்படி ஒரு கேள்வி கேட்டது எனக்கு ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. ஏனென்றால் இன்று நம் இஸ்லாமியச் சமுதாய இளைஞர்களில் சிலர் இப்படிக் கேள்விகளைக் கேட்கும் மனநிலைக்கு ஆளாகி வருகிறார்கள். தராவீஹ் தொழுகையில் ஏன் இருபது ரகாஅத்துகள் தொழ வேண்டும். எட்டு ரகாஅத்துகள் போதாதோ என்கின்றனர். பர்ளுத் தொழுகைக்கு மேல் சுன்னத்து,