பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

முழுமையும் இறை அச்சத்துக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இறை நெறி பேணி நடந்தால் இறையுவப்பும் இறையருளும் கிட்டும், இல்லையெனில் இறைவனின் தண்டனையிலிருந்து தான் தப்பவே முடியாது என்ற அச்ச உணர்வே அவர் நெஞ்மெல்லாம் நிறைந்திருக்கிறது. இந்த இறையச்ச உணர்வு பொங்கிப் பொழியும் நிலையில் அவர் தன் வைகறைத் தொழுகையை நிறைவேற்றுகிறார். பிறகு உணவு உட்கொண்டு, தன் அன்றாடக் கடமைகளில் முழு வீச்சுடன் ஈடுபடுகின்றார். இப்போது அவருள் பரவியிருந்த இறையச்ச உணர்வு கொஞ்சங்கொஞ்சமாகக் குறையத் தொடங்குகிறது. முழுதும் குறைவதற்கு முன்னதாகத் தன் நண்பகல் தொழுகையை நிறைவேற்றுகிறார். மீண்டும் நெஞ்சமெல்லாம் இறையச்ச உணர்வு நிறைய, இறை நெறி பேணி நடக்க முனைகிறார். பின் நண்பகல் உணவுக்குப் பின் பணி முனைப்பில் அவர் உள்ளத்து இறையச்ச உணர்வு குறையத் தொடங்குகிறது. முழுமையும் குறையுமுன் அவர் பிற்பகல் தொழுகையைத் தொடங்கி நிறைவேற்றுகிறார். பின் மீண்டும் பணி, இறையச்சக் குறைவு. மீண்டும் இறையச்சத்தைப் புதுப்பிக்க அந்தி நேர மக்ரிஃப் தொழுகை. பின், இறுதியாக இரவுப்படுக்கைக்குச் செல்லுமுன் இஷாஅத் தொழுகை. இவ்வாறு வைகறையில் கண் விழித்தது முதல் இரவு கண் மூடி உறங்கச் செல்லும் வரை இடையறாது இறையச்ச உணர்வோடு வாழ ஐவேளைத் தொழுகைகளே ஆதார சுருதியாக அமைகின்றன.

ஒரு மனிதன் தவறான வழியில் சென்றால் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என்ற இறையச்ச உணர்வோடு நேரான வழியில் முறையான வாழ்க்கை வாழ, உளவியல் அடிப்படையில் நமக்கு நாமே கடிவாளமிட்டுக் கொண்டு, நேர் வழியில் நடக்க உறுதுணையாயமைந்துள்ள செயல்பாடுகளே ஐவேளைத் தொழுகைகளே தவிர, அவை வெறும் சடங்கு